Friday, 22 January 2010

சென்னையில் பயங்கரம் ஒட்டல் அதிபர் வெட்டி கொலை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
எண்ணூர் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் ஜெயசிங் (வயது 52). இவர் எர்ணாவூர், எண்ணூர் ஆகிய இடங்களில் இரண்டு ஓட்டல்களை நடத்தி வந்தார். ரியல் எஸ்டேட் பிசினசும் செய்து வந்தார்.நேற்றிரவு ஜெயசிங் ஓட்டல்கள் மூடப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். எண்ணூர் அனல் மின் நிலையம் அருகே வந்தபோது, மர்மக் கும்பல் ஒன்று வழிமறித்து அவரை சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயத்துடன் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.பின்னர் அந்த கும்பல் அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, பிரேஸ்லெட், தங்க கடிகாரம் போன்றவற்றை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. அவர் அணிந்திருந்த நகைகளின் மதிப்பு 35 சவரன் என்று கூறப்படுகிறது. இன்று காலையில் அனல் மின் நிலையம் அருகே அவரது மோட்டார் சைக்கிள் அனாதையாக கிடந்ததை பார்த்த அந்த பக்கம் சென்றவர்கள், வெட்டுக் காயங்களுடன் புதரில் ஜெயசிங் பிணம் கிடந்ததையும் பார்த்தனர். உடனடியாக எண்ணூர் போலீஸ் நிலையத்திற்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் இறந்து போனது ஜெயசிங் என்பது தெரிய வந்தது. உடனடியாக அவரது உடல் ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. அந்த நாய் சிறிது தூரம் சென்ற பின்னர் திரும்பி வந்தது. நகைக்காக மர்மக் கும்பல் ஜெயசிங்கை கொலை செய்ததா? அல்லது தொழில் போட்டியால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

0 comments: