Friday, 8 January 2010

உலகிலேயே உயரமான கட்டிடம் புர்ஜ் கலிபா சதுர அடி விலை நிர்ணயம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
உலகிலேயே உயரமான கட்டிடம் புர்ஜ் கலிபா சதுர அடி விலை நிர்ணயம் உலகிலேயே மிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலிபா இரண்டு தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது, 828 மீட்டர் உயரம் கொண்ட இந்த கட்டிடத்தில் வர்த்தக நிறுவனங்களும், நட்சத்திர ஒட்டல்கள் மற்றும் குடியிருப்புகளும் உள்ளன. 100 வது மாடியை இந்திய தொழில அதிபர் ஷெட்டி அவர்கள் முழுவதும் எடுத்து இருக்கிறார்கள்,இவற்றில் குடியிருப்பு களை விற்க விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீட்டின் விலை சதுர அடிக்கு ரூ. 38 ஆயிரம் என நிர்ணயித்து உள்ளனர். உலகில் பெரிய நகரங்களில் இருக்கும் விலையை விட இது குறைவாகவே உள்ளது. அதிலும் மும்பையை விடவும் மிகவும் குறைவாக இருக்கிறது. மும்பை நாரி மன் முனையில் உள்ள என்.சி.பி.ஏ. அடுக்குமாடி வளாகத்தில் 4 படுக்கை அறை வீட்டின் ஒரு சதுர அடி விலை ரூ. 97 ஆயிரத்து 842 ஆக உள்ளது. இதை ஒப்பிட்டு பார்க்கும்போது துபாய் கட்டிடம் வீட்டு விலை மிக குறைவாக இருக்கிறது. நாரிமன் முனையில் மற்ற இடங்களில் சதுர அடி ரூ. 90 ஆயிரத்துக்கு மேல்தான் இருக்கின்றன. சென்னையில் போட்கிளப், போயஸ்கார்டன், பெங்களூரில் லாவல்லி ரோடு, விட்டல் மலையா ரோடு ஆகிய இடங்களில் சதுர அடி ரூ. 21 ஆயிரம் வரை உள்ளன. டெல்லியில் 10 ஆயிரம் சதுடி அடியில் இருந்து 22 ஆயிரம் சதுர அடி வரை உள்ள பங்களாக்களின் விலை ரூ. 50 கோடியில் இருந்து ரூ. 125 கோடி வரை உள்ளன. மும்பையில் இடம் பற்றாக்குறையால் தான் இவ்வளவு அதிக விலை இருக் கிறது. அங்குள்ள நடுத்தர பகுதியான வொர்லி, லோவர் பரேல், பிரபாதேவி ஆகிய இடங்களில் கூட சதுர அடி ரூ. 40 ஆயிரம் வரை உள்ளது.

0 comments: