இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
தி.நகரில் உள்ள ஜவுளி கடை அருகில் பிளாட்பாரத்தில் வசிப்பவர் ரேனுகா (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஆந்திராவை சேர்ந்த இந்த பெண், பேப்பர் கழிவுகளை சேகரித்து பிழைப்பு நடத்தி வந்தார்.
கடந்த 2008 ஜனவரி 10ம் தேதி, மீன்பாடி வண்டி அருகில் பானு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் சிலர் அவரை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த பெண்ணுக்கு தெரிந்தவர்கள் மாம்பலம் போலீசில் புகார் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் சைதாப்பேட்டையை சேர்ந்த சத்யா (26), கருப்பா (எ) அப்பு (26), செல்வம் (25), அருண் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முகமது ஜபருல்லாகான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சிறப்பு அரசு வக்கீல் ஜெயந்தி ஆஜரானார். பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, “குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் 4 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராத தொகையில் ரூ.1 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்டஈடாக தரவேண்டும்” என்று தீர்ப்பளித்தார்.
Sunday, 10 January 2010
Subscribe to:
Post Comments (Atom)



1 comments:
மைனர் பெண்ணாக இருந்ததால் 10 வருடம், மேஜர் பெண்ணாக இருந்தால் அபராதத்தோட நிறுத்தியிருப்பாரோ?
ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும்!
Post a Comment