இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆண்டுதோறும் வசதி குறைந்தவர்களுக்கு இலவச வேட்டி- சேலை வழங்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து கருணாநிதி பேசினார்.
இந்த ஆண்டு ரூ.256 கோடி செலவில் 3.28 கோடி பேருக்கு ஜனவரி 10ம் தேதி வரை இலவச வேட்டி - சேலைகள் வழங்கப்பட உள்ளன.
“திமுகவைப் பொருத்தவரை தேர்தலுக்காகவோ, கட்சி அரசியலுக்காகவோ இத்திட்டத்தை நிறைவேற்றவில்லை.
“பொங்கல் நாளில் ஏழை எளியவர்கள் பூரிப்போடு புத்தாடை அணிய வேண்டும் என்பதற்காக இத்திட்டத்தை செயல்படுத்துகிறோம்.
“இது மக்களுக்கான அரசு, தேர்தலுக்கான அரசு அல்ல என்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது,” என்றார் அவர்.
தேர்தல் ஆதாயத்துக்காகவே திமுக இலவசங்களை வழங்குகிறது என அதிமுக தலைவி ஜெயலலிதா உட்பட பலரும் குறை கூறி வரும் நிலையில் கருணாநிதி இவ்வாறு கூறியுள்ளார்.
“குறை இல்லாமல் ஓர் அரசு இருக்க முடியாது.
“மக்களுக்கு பாடுபடும் இந்த அரசில் குற்றங்குறைகள் இருந்தால் கண்டியுங்கள்; தண்டியுங்கள் என்பதுதான் இந்த அரசின் கொள்கை. அதே சமயம் வெறும் குறைகளை மட்டுமே சொல்வது ஜனநாயகம் அல்ல,” என கூறினார் திமுக தலைவருமான கருணாநிதி.
“குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே குறை சொல்லிக் கொண்டிருந்தால் அது ஜனநாயகம் அல்ல.
“குறை கண்ட இடத்தில் அதைச் சொல்வதும், அதைத் திருத்திக் கொள்வதும்தான் ஜனநாயகம்,” என்றார் தமிழக முதல்வர் மு.கருணாநிதி.
எனினும் இலவச அன்பளிப்புகள் மூலம் திமுக வாக்குகளைக் குவிப்பதாக அரசியல் கணிப்பாளர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் 2011-ம் ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 190 முதல் 200 இடங்களில் வெற்றி பெறும் என்று கருணாநிதியின் மகனும் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
Sunday, 3 January 2010
Subscribe to:
Post Comments (Atom)



0 comments:
Post a Comment