இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
விடுதலை புலிகளின் தலைவர் விரைவில் மக்கள் முன்பு தோன்றுவார் என விடுதலைபுலிகள் அறிவிப்பு மேலும் விடுதலைபுலிகளின் இனைய தளம் ஒன்றில் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பாதுகாப்பாகவுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கை.
எமது அன்பிற்குரிய தமிழீழ மக்களுக்கு.
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றி இலங்கை அரசும், சில சர்வதேச சக்திகளினாலும் பரப்பப்பட்ட மாறுபட்ட தவறான தகவல்களை எமது இயக்கம் முற்றாக மறுக்கின்றது.
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மிகுந்த நலமுடனும் பாதுகாப்புடனும் உள்ளார். தேசியத் தலைவர் பற்றிய தவறான செய்திகளுக்கு எமது மக்கள் செவிசாய்க்காமல் எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு வீறுடன் களம் அமைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.
அதோடு தேசியத் தலைவர் அவர்கள் வெகுவிரைவில் மக்கள் முன் தோன்றி உரிய நேரத்தில் உரை நிகழ்த்துவார்.
சர்வதேச ஒழுங்குகளுக்கு ஏற்ப எமது மக்களின் தற்போதைய நிலை, இலங்கை அரசின் நோக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்ட எமது தேசியத் தலைவர் விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை புதிய வடிவில் நெறிப்படுத்தியுள்ளார்.
எமது தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் பாரிய இழப்புக்களை எமது மக்களுடன் நாம் சந்தித்துள்ளோம்.
இழப்புக்கள் என்பது எமக்கும் எமது மக்களுக்கும் புதியவைகள் அல்ல.
சிங்கள அரசின் சிந்தனைகளைத் தாண்டி எமது விடுதலைப் போராட்டம் புதிய வடிவம் பெற்று வீறுடன் எழுந்து நிற்கின்றது.
சிங்கள பேரினவாத அரசு எமத மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு மதிப்பளித்து எமது மக்களுக்கு சரியான தீர்வு திட்டத்தை முன்வைக்காத வரை சிங்கள பேரினவாதற்திற்கு எதிராக எமது விடுதலைப்போர் எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தலைமையில் மாறுபட்ட வடிவங்களுடன் தொடர்வதுடன்.
எமது மக்களை ஏமாற்ற நினைக்கும் எந்த சக்தியினையும் நாம் அனுமதிக்கப்போவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்
ச.தமிழ்மாறன்
செய்தி தொடர்பாளர்
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம் .



3 comments:
காந்தியடிகளும் உயிரோடு தான் இருக்கிறார். விரைவில் மக்கள் முன்பு தோன்றுவார். நேருவும் உயிரோடு தான் இருக்கிறார், விரைவில் மக்கள் முன்பு தோன்றுவார். பெரியாரும் உயிரோடு தான் இருக்கிறார், விரைவில் மக்கள் முன்பு தோன்றுவார். எம்.ஜி.ஆரும் உயிரோடு தான் இருக்கிறார், விரைவில் மக்கள் முன்பு தோன்றுவார். பிம்பிலிக்கி பியாப்பி..,மாமா பிஸ்கோத்து..,
எப்படிய்யாயா இப்படி நீங்க பிரபாகரனை வாருவதாக எண்ணி அவரை பெரியாருடனும் எம் ஜி ஆர் உடனும் இணைத்து விட்டீர்களே அனானி பிழைச்சுப் போங்க
மவனே கையில் மாட்டினே -----------------
Post a Comment