Tuesday, 19 January 2010

சச்சினை போல சொல்லி கொண்டே இருப்பார் கலைஞர்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
திருவள்ளுவர் விருது வழங்கும் விழாவில் பேசிய கருணாநிதி, தாம் ஓய்வு பெறுவது உறுதி என்று தெரிவித்திருந்தார். ஆனால் எப்போது என்று கூறவில்லை. அது பற்றிக் கருத்துத் தெரிவித்த திரு மு.கருணாநிதியின் மகனும் மத்திய அமைச்சருமான திரு மு.க.அழகிரி, “இந்தியக் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் விலகப்போகிறேன் விலகப்போகிறேன் என்று விளையாடிக் கொண்டேயிருக்கிறார்.அந்தக் கதைதான் திமுக தலைவர் கருணாநிதி கதையும். அவர்கள் விலக நினைத்தாலும் அவர்களது பணி அவர்களை விலகவிடாமல் தொடரச் செய்து கொண்டிருக்கிறது.“இந்தியக் கிரிக்கெட் வீரர் சச்சின் எப்படி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற முடியாமல் தொடர்ந்து விளையாடி வருகிறாரோ அவரைப் போன்றே திமுக தலைவர் தமிழக முதல்வர் கருணாநிதியும் பதவியிலிருந்து ஓய்வுபெற மாட்டார் என்று கூறியுள்ளார் அழகிரி. திமுக தலைவர் கருணாநிதிக்குப் பிறகு கட்சியின் தலைமைப் பொறுப்பையும் முதல்வர் பொறுப்பையும் ஏற்பது அவரது புதல்வர்களான துணை முதல்வர் ஸ்டாலினா அல்லது மத்திய அமைச்சர் அழகிரியா என்பது திமுகவினருக்கே கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலையில், தாம் அரசியலில் முழு மூச்சாக ஈடுபடுவது பற்றி எதிர்காலத்தில்தான் முடிவுசெய்யப்படும் என்று கூறியுள்ளார் மு.க.அழகிரி.

0 comments: