இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
தாம்பரம் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு வியாபாரி ஒருவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போதை வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்தவர் தியாகு (25). தாம்பரம் ரங்கநாதபுரம் முதல் தெருவில் வசித்து வந்தார். தாம்பரம் பஸ் நிலையத்தில் தண்ணீர் பாக்கெட், பழம், பிஸ்கட் ஆகியவற்றை விற்பனை செய்து வந்தார். தாம்பரத்தைச் சேர்ந்த ரவியும் இதேபோல் வியாபாரம் வருகிறார். வியாபார ரீதியாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், நேற்று இரவு 9.30 மணி அளவில் ரவியும், அவருடைய கூட்டாளிகள் சிலரும் தியாகுவை வரவழைத்து தாம்பரம் பஸ் நிலையம் அருகே மது அருந்திக் கொண்டிருந்தனர். போதை தலைக்கு ஏறியதும், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அந்த நேரத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தியாகுவை சரமாரியாக வெட்டினர். அவர் பீதியில் ஓட்டம் பிடித்தார். கும்பல் அவரை விரட்டி விரட்டி வெட்டி கொலை செய்தது. இதைப் பார்த்த பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால், பஸ் நிலையமே வெறிச்சோடியது.
இதுகுறித்து தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய ரவியை (25) இரவோடு இரவாக தாம்பரம் ரங்கநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர். கூட்டாளிகளையும் தேடி வருகின்றனர்.
Wednesday, 20 January 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment