இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
புதுச்சேரி குண்டு பள்ளம் பகுதியை சேர்ந்த அம்பையா அத்தோட்டி, மயிலாப்பூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் (வடக்கு) அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னை அண்ணா நகரில் உள்ள விஐபி லவுஞ்ச் நிறுவன சூட்கேசை ரூ.3,150க்கு வாங்கினேன். ஓராண்டு உத்தரவாதம் (வாரன்டி) அளிக்கப்பட்டது. ஓராண்டுக்குள் சூட்கேஸ் பழுதடைந்தது. சம்பந்தப்பட்ட கடையில் அதை கொடுத்து மாற்றாக ரூ.10 ஆயிரம் மதிப்பில் சூட்கேஸ் வாங்கினேன். அதில், ரூ.3,150 போக மீதிப் பணத்தை செலுத்தினேன்.
அந்த சூட்கேசும் ஒரு மாதத்துக்குள் பழுதடைந்தது. சம்பந்தப்பட்ட கடையில் புகார் செய்தேன். அவர்கள் சென்னை பாரிமுனை அர்மேனியன் தெருவில் உள்ள கடையில் பழுதை சரிசெய்ய அறிவுறுத்தினர். அவர்களும் அலைக்கழித்தனர்.
இறுதியில் ரூ.2,500க்கு சூட்கேசை பெற்று கொள்வதாக கூறினர். சூட்கேசை மாற்றி கொடுக்காத நிறுவனத்தின் சேவையில் குறை உள்ளது. எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.20 ஆயிரம் பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
நுகர்வோர் நீதிமன்ற தலைவர் மோகன்தாஸ், உறுப்பினர் கமலக்கண்ணன் ஆகியோர் வழக்கை விசாரித்து அளித்த தீர்ப்பில், “பாதிக்கப்பட்ட அம்பையா அத்தோட்டிக்கு விஐபி லவுஞ்ச் நிறுவனம், சூட்கேஸ் விலை ரூ.10 ஆயிரம், மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.5,000, வழக்குச் செலவாக ரூ.2,500 வழங்க வேண்டும். இதை 6 வாரத்துக்குள் கொடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
Saturday, 30 January 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment