இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
மத்திய பத்திரிக்கை தகவல் அலுவலக இணைய இணைப்பின் கடவுச்சொல்லை திருடி பயன்படுத்திய பெங்களூர் மென்பொருள் பொறியாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை சாஸ்திரி பவனில் மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் உள்ளது. இதன் இன்டர்நெட் இணைப்புக்கான அடையாள எண் மற்றும் ரகசிய குறியீட்டு எண்ணை திருடி வேறு ஒருவர் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சிபிஐ போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி, பெங்களூரை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் அருண்குமாரை கைது செய்தனர். இதேபோல் 52 பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களிடம் அருண்குமார் மோசடி செய்துள்ளார். இந்த வழக்கை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கிள்ளிவளவன் நேற்று விசாரித்து அருண்குமாருக்கு ஓராண்டு சிறை, ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
Sunday, 24 January 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் பீர் முஹம்மது,
// கடவுள் சொல் திருட்டு // என்றதும் நான் ஏதோ இறைவனால் அனுப்ப பட்ட வேதங்களை யாரே திருடி விட்டார்கள் என நினைத்து விட்டேன். :-) கடவுளின் சொல் எல்லோருக்கும் உரிமையானது தானே ? அதை ஏன் போய் திருட வேண்டும் என உள்ளே வந்து பார்த்தால் கடைசியில் அது கடவு சொல் (Password) என தெரிந்து கொண்டேன்.
பிறகு இந்த // இதேபோல் 52 பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களிடம் அருண்குமார் மோசடி செய்துள்ளார். // விஷயம் பற்றி முழு விவரம் தெரியுமா ? காரணம் BSNL ன் அகல பட்டை இணைப்பானது CLIP Based. அதாவது ஒரு தொலைபேசி சந்தாதாரர்க்கு கொடுக்கப்பட்ட கணக்கை இன்னொரு BSNL சந்தா தாரர் கண்டிப்பாக உபயோகிக்க இயலாது. ஆனால் Dial - UP கணக்கை உபயோகிக்க இயலும். அதிலும் 172233 வழியாக தான் சாத்தியம். 172222 Net-ONE சாத்தியமற்றது. மேலும் இந்த இணைப்பு முறை தற்போது வழக்கொழிந்து விட்டது. எங்கும் அகலப்பட்டை தான்.
கண்டிப்பாக நீங்கள் நிருபர் கிடையாது. சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மத்திய பத்திரிகை தகவல் அலுவலகத்தின் P.R.O வும் கிடையாது. ஏதே ஒரு செய்தி தாளில் படித்து விட்டு அதை உடனே Ctl + C and Ctl + V next hit the publish button. அதிலும் நேர்மையற்ற முறையில் தகவல் பெற்ற இடத்தை கூட குறிப்பிடவில்லை. தகவலும் மற்றவர்களை குழப்ப கூடிய ஒன்று.
"குழப்பம் விளைவிப்பது கொலையைவிட கொடிய செயல்"
இதை நான் சொல்லவில்லை . நமது பிரியத்திற்குரிய முஹம்மது நபி(ஸல்) சொல்லிவிட்டு சென்றது. இது போல் தகவல்களை பரப்புவதறகான செயலின் பெயர் ஆங்கிலத்தில் Cyber bullying. அழகுத்தமிழில் "இணையப் புரளி" இது போல் செய்பவர்களை எனது ஸ்டைலில் நான் அழைப்பது "சளக் - புளக்கர்" ! ஏனிந்த வேலை ? ம்ம்ம ?
with care & love,
Muhammad Ismail .H, PHD.,
// எனது கேள்விக்கு பதில் சொல்லுங்களேன் //
இது வேறையா ? முதலில் மேலே நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் சகோதரரே !!!
Post a Comment