இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
ஆசியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஜப்பான் ஏர்லைன்ஸ் திவாலாகும் நிலையில் உள்ளது.
அந்நிறுவனத்தின் நிர்வாகத்தினர், கடனை தீர்க்க முடியாத நிலையில் உள்ளதால் உரிய பாதுகாப்புக்கு முறைப்படி மனு தாக்கல் செய்யத் தீர்மானித்திருப்பதாக ஜப்பானிய செய்தி நிறுவனத் தகவல் கூறியது.
ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவினர் நேற்று நடத்திய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் கூறியது.
அந்நிறுவனத்திற்கு 16.5 பில்லியன் டாலர் கடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.
உலகப் பொருளியல் நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட விமான நிறுவனங்களில் ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனமும் ஒன்று.
Sunday, 24 January 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment