இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னை கிண்டியில் பால்கனி இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கிண்டி வெங்கடாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியின் தரைதளத்தில் வசிப்பவர் ஜானகி (வயது 58).இவர் தனது வீட்டின் பின்பக்கத்தில் பால்கனிக்கு கீழே படுத்து தூங்கினாராம்.
அப்போது முதல் மாடியில் இருந்த பால்கனி இடிந்து ஜானகி மீது விழுந்தது. இதில் இடிபாட்டில் சிக்கி ஜானகி பலத்த காயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக கிண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அங்குசாமி விசாரணை நடத்தி வருகிறார்.
Sunday, 17 January 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment