Sunday, 17 January 2010

95 வயது மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜோதி பாசு மரணம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிபாசு உடல்நலக்குறைவு காரணமாக கொல்கத்தா ஏஎம்ஆர்ஐ மருத்துவமனையில் உயிரிழந்தார். இவருக்கு வயது 95. மார்க்சிஸ்ட்கட்சியின் மூத்த தலைவரும், மேற்குவங்க முன்னாள் முதல்வருமான ‌‌ஜோதிபாசு காலமானார். நிம்மோனியா காய்சலால் பாதிக்கப்பட்ட அவர் கோல்கட்டா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஜோதிபாசுவை கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் மன்மோகன்சிங், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்பட பலர் மருத்துவமனையில் சென்று பார்த்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை டயாலிசிஸ் செய்யப்பட்டது. ரத்த அழுத் தத்தைச் சீராக்க மருந்தின் அளவு அதிகரிக்கப்பட்டது. பிராண வாயுவின் அளவும் அதிகமாக உட்செலுத்தப்படுகிறது. டாக்டர்கள் குழு அவரைத் தொடர்ந்து கண்காணித்து வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார்.

கோல்கட்டாவில் டாக்டரின் மகனாக பிறந்து அங்குள்ள பிரசிடன்சி கல்லூரில் பட்டம் பயின்று தொடர்ந்து அமெரிக்காவில் சட்டம் பயின்றார். தொழிலாளர்கள் மீது அக்கறையாக இருந்த அவர் ரயில்வே தொழிலாளர் யூனியனில் தன்னை சேர்த்துக்கொண்டார். தொடர்ந்து அவர் கம்யூனிஸ்ட் கொள்கையில் ஈர்ப்பு கொண்டார். கட்சி துவங்கிய 1964 முதல் பல ஆண்டு காலம் பொலிட் பீரோ உறுப்பினராக இருந்து கட்சியில் பங்காற்றியவர்.

பெங்கால் சட்டசபையில் இருந்து முதன்முதலாக சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1967 மற்றும் 1969 களில் மேற்கு வங்க துணை முதல்வராக பணியாற்றினார். 1977 முதல் 2000 ம் ஆண்டு வரை முதல்வராக இருந்து மேற்குவங்க மக்களுக்காக பணியாற்றியவர். இந்தியாவில் அதிக காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.

1 comments:

said...

தன்னுடைய கண்களையும்,
உடலையும்
கொடையாக்கியுள்ள
மாம்னிதர்.