Thursday, 14 January 2010

மீனவர்களுக்கு விஜய் கொடுத்த பிரியாணி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தற்போது விஜய் நடித்துக்கொண்டிருக்கும் 'சுரா' படத்தின் படப்பிடிப்பு கடற்கரையோரங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. சங்கிலி முருகன் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். படுவேகமாக 60 சதவிகிதத்துக்கும் அதிகமாகவே படப்பிடிப்பை முடித்துள்ளார் இயக்குநர் எஸ்பி ராஜ்குமார். இதில் மீனவ மக்களின் ஒத்துழைப்பும் கணிசமாக உண்டாம். மீனவர்களின் வாழ்க்கையை எடுத்துக்காட்டும் வகையில் படத்தின் பல காட்சிகள் உள்ளதால். 'சுறா' படம் சென்னையில் தொடங்கி புதுவை வரை கடற்கரையோரங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனுமந்த குப்பம் என்ற பகுதியின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் விஜய் அந்த ஊர் மக்களுக்கு தன்னுடைய சொந்த செலவில் பிரியாணி விருந்து கொடுத்துள்ளார். மீனவ மக்களுடன் அவரும் உட்கார்ந்து உணவு சாப்பிட்டுள்ளார். இந்த ஊரைச் சேர்ந்த மக்கள் சிலர் விஜயின் விருந்தைப்பற்றி கூறுகையில், "இந்த விருந்தை நாங்கள் பொங்கல் விருந்தாகக் கருதுகிறோம்" என்றனர்.விஜயுடன் விருந்து சாப்பிட சுமார் இரண்டாயிரம் பேர் வந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் விஜயே உணவை பரிமாரினார். விருந்தின் போது அவர் பேசுகையில், "சுறா படம் கடலோர பகுதி மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக இருக்கும். அந்தப் படத்தில் நான் நடிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.கடந்த ஒருவாரமாக இங்கு படப்பிடிப்பு நடக்கும்போது இரவு நேரத்திலும் பலர் வந்து எங்கள் வீட்டில் சாப்பிடுங்கள் என்று கூறிக் கொண்டே இருந்தார்கள். படப்பிடிப்பு முடிவதற்கு இரவு 2 மணிக்கு மேலாகிறது. அதற்கு மேல் யாருக்கும் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று கருதிதான் உங்கள் அனைவருடனும் சாப்பிட ஆசைப்பட்டு இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்தேன். ஒத்துழைப்புக்கு நன்றி" என்றார்

0 comments: