Friday, 15 January 2010

வால்பாறையில் சிறுத்தையிடம் சிக்கி சிறுவன் சாவு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
வால்பாறையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று சிறுவனை கடித்து இழுத்துச்சென்று கொன்றுள்ளது. அச்சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை முடீஸ் அருகேயுள்ள தோணிமுடி எஸ்டேட்டில் வசிப்பவர் பாபுகுமார். தோட்டத்தொழிலாளி. இவரது மகன் முகேஷ்(5) நேற்று மாலை பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்தான். வனப்பகுதியில் இருந்து ஒரு சிறுத்தை திடீரென பாய்ந்து வந்து முகேஷ் கழுத்தை கவ்வியபடி காட்டுக்குள் இழுத்துச் சென்றது. மற்ற சிறுவர் கள் அலறினர். பொதுமக்கள் தடிகளுடன் வனப்பகுதியில் தேடினர்.

குடியிருப்பு பகுதியிலிருந்து சிறிது தூரத்தில் ஒரு சவுக்கு மரத்தின் அடியில் சிறுத்தை நின்று கொண்டிருந்தது. மக்கள் திரண்டு வருவதைப்பார்த்த சிறுத்தை பயந்து ஓட்டம் பிடித்தது. சிறுத்தை நின்ற இடத்தில், முகேஷ் ரத்தவெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்தான். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில், சிறுவன் முகேஷ் இறந்தான்.

இன்று காலை வால்பாறை நகராட்சி தலைவர் கணேசன், செயல் அலுவலர் ராஜ்குமார், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்க இயக்குனர் பசுவராஜ், வால்பாறை வனச்சரகர் ஆரோக்கியராஜ், மானம்பள்ளி வனச்சரகர் லட்சுமணன், ஆகியோர், சிறுவ னின் பெற்றோரை சந்தித்து ஆறு தல் கூறினர். வனத்துறை சார்பில் இழப்பீட்டுத்தொகையாக ரூ.25 ஆயிரம், முதல் தவணையாக சிறு வனின் பெற்றோரிடம் புலிகள் காப்பக கள இயக்குனர் வழங்கினார்.

சிறுத்தையை பிடிக்க தோணி முடி எஸ்டேட்டில் கூண்டு வைக்கப்பட்டது. வால்பாறையில் சிறுத் தை நடமாட்டம் உள்ளதால், அதைப் பிடிக்க எம்.எல்.ஏ அலுவலக பின்புறம் ஏற்கனவே ஒரு கூண்டு வைக்கப்பட்டுள்ளது. சிறுத்தை நடமாடுவதால், வால்பாறை பகுதி மக்கள், இரவு நேரங்களில் தங்கள் குழந்தைகளை தனியாக வெளியே அனுப்ப வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

0 comments: