Thursday, 14 January 2010

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பொங்கல் திருவிழாவை பஞ்சபூத வழிபாட்டுக்குஉரிய நாளாகக் கொள்ளலாம். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவையே பஞ்சபூதங்கள். தற்போது வரை கிராமங்களில் மண்பானையிலேயே பொங்கலிடுகின்றனர். இந்தப் பானை பூமியில் இருந்து களிமண்ணால் செய்யப்படுகிறது. பானையில் நீர் விட்டு, பனை ஓலை மூலம் நெருப்பு வைத்து அரிசியைக் கொதிக்க வைக்கிறோம். நெருப்பு எரிவதற்கு காரணமாக காற்று இருக்கிறது. வெட்ட வெளியில் பொங்கல் வைப்பதன் மூலம் ஆகாயத்தை பார்க்கிறோம். பொங்கல் வைக்கும் புகையும் வளிமண்டலத்துக்கு நன்மையையே செய்கிறது. இதன்படி பஞ்சபூதங்களை வழிபடும் வைபவமாக பொங்கல் அமைந்துள்ளது.

0 comments: