Saturday, 16 January 2010

கேப்டன் டி.வி. அறிமுகம் விரைவில்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கேப்டன் டி.வி. என்ற பெயரில் வரும் ஏப்ரல் 14 இல் டி.வி. தொடங்குகிறார். இதற்கான பணிகள் அனைத்தும் வேகமாக நடந்து வருகிறது. டி.வி.யின் லோகோவை பொங்கல் தினத்தில் விஜயகாந்த் வெளியிட்டார். கேப்டன் டி.வி.யின் நிர்வாக இயக்குனராக எல்.கே. சுதீஷ் பொறுப்பேற்றுள்ளார். அவர் கூறியதாவது:- கேப்டன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிவரை நவரசம் ததும்பும் தொடர் நாடகங்களும், மதியம் மக்களின் மனம் கவரும் திரைப்படங்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட ஆங்கிலத் திரைப்படங்களும், மாலை புத்தம் புதிய தமிழ் திரைப்படங்களும் இடம் பெறுகின்றன. பெண்கள், குழந்தைகள், மாணவ -மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகள் இதில் முக்கிய பங்கு பெறுகின்றன. நேர்மையான நடு நிலைச்செய்திகள் மக்கள் பிரச்சினையை முன்னிறுத்தி ஒளிபரப்பப்படும். இது தவிர பிற நிகழ்ச்சிகளில் திறமையுள்ளவர்களை வெளிக்கொண்டு வர கேப்டன் தொலைக்காட்சி முன்னுரிமை அளிக்கிறது. கேப்டன் தொலைக்காட்சியின் சோதனை ஒளிபரப்பு மார்ச் 15 முதல் ஏப்ரல் 13 வரை ஒளிப்பரப்பாகும். ஏப்ரல் 14 முதல், 24 மணி நேரமும், அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்விக்கும் புதிய நிகழ்ச்சிகளோடு ஒளிபரப்பாகும். இது முற்றிலும் ஒரு பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த தொலைக்காட்சியாக அமையும். இவை அனைத்தையும் இன்சாட் 4 பி செயற்கைகோள் ஒளிபரப்பு மூலம் காணலாம். இவ்வாறு அவர் கூறினார்.

1 comments:

said...

வாழ்த்துக்கள்....