இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
பிரான்ஸ் அதிபர் சர்கோஸி புர்கா பெண்ணடிமைத்த னத்தின் அடையாளம் என்று கூறியதாக தமிழக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இங்குள்ள சில முஸ்லிம் அமைப்புகள் இந்தக் கூற்றுக்கு எதிராக தங் களின் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றன.
பெண்கள் போகப் பொருளாகக் கருதப்படாமல் கண்ணியமாக மதிக்கப்பட வேண்டுமானால் புர்கா போன்ற உடல் மறைக்கும் ஆடைகளைத்தான் அணிய வேண்டும். காமுகர்களின் பார்வையில் இருந்து பெண்களைக் காப்பாற்றும் புர்காவை பெண்ணடிமைத்தனத்தின் அடையாளம் என்று யார் கூறினாலும் அவர்கள் அறிவீனர்களே என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
(இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா? என நமது நூலில் ஹிஜாப் எனும் புர்கா பெண்ணடிமைத்தனம் அல்ல என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது)
புர்காவைத் தடை செய்வதாக யார் கூறினாலும் உலக முஸ்லிம்கள் ஒன்று திரண்டு போராடுவது அவசியம் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் இந்திய ஊடகங்கள் செய்தியைத் திரித்து வெளியிட்டுள்ளதாகவே நமக்குத் தோன்றுகிறது. உடலை மறைக்கும் ஆடைக்கு தடை விதிக்கப்படும் என்றோ, அது பெண்ணடிமைத்தனம் என்றோ பிரான்ஸ் அதிபர் கூறியதாகத் தெரியவில்லை.
புர்காவுடன் முகத்திரை அணிந்து முகத்தை மறைத்து அடையாளம் இல் லாதவர்களாக இருப்பதை மத அடையாளமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியதாகவே தெரிகிறது. பள்ளிக்கூடங்களில் தடை செய்ததுபோல் அனைத்து இடங்களிலும் பெண்கள் முகத்திரை அணிந்து வருவது தடை செய்யப்படும் என்றுதான் பிரான்ஸ் அதிபர் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
இதை உறுதி செய்யும் வண்ணம் லண்டன் பத்திரிக்கை ஒன்றில் வெளியான செய்தி
http://www.telegraph.co.uk/news/worldnews/europe/france/6946579/Women-who-wear-burkas-in-France-face-700-fine.html
(லிங்க் அனுப்பியவர் இனிமை)
இலட்சக்கணக்கான முஸ்ம்கள் வாழும் பிரான்ஸ் நாட்டில் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையினர்தான் முகத்திரை அணியும் வழக்கமுடையவர்கள். இதை மற்ற முஸ்ம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் காரணமாகத்தான் பிரான்ஸின் ஒட்டுமொத்த முஸ்ம்களும் ஒன்று திரண்டு எந்தப் போராட்டத்திலும் ஈடுபடவில்லை.
முகத்திரை போட்டுக் கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டால் அதை எதிர்க்காமல் இருப்பதுதான் சமூகத்துக்கு நல்லது. முகத்திரை அணிந்து தமது அடையாளத்தை மறைத்துக் கொள்ளும்போதுதான் அதிகமான ஒழுங்கீனங்கள் ஏற்படுகின்றன.
தன்னை யாரும் அடையாளம் காண மாட்டார்கள் எண்ணும்போது சில பெண்கள் யாருடனும் செல்லக்கூடிய துணிச்சல் ஏற்படுகிறது என்பதை நாம் காண முடிகிறது. சில ஆண்களும் முகத்திரை போட்டுக் கொண்டு சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதற்கும் இது உதவுகிறது.
கேவலமான தொழில் செய்யும் முஸ் மல்லாத பெண்கள் கூட முகத்திரை போட்டுக் கொண்டு முஸ்ம்களைக் கேவலப்படுத்துவதையும் பெருநகரங்களில் காணலாம். முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கட்டளை இடாமல் இருந்தும் முகத்தை மறைப்பதால் மோசமான விளைவுகள்தான் ஏற்படுகின்றன.
சென்னையில் முகத்திரை அணிந்து ஊர் சுற்றும் இளம் பெண்களில் சரி பாதி பேர் முஸ்ம்கள் அல்ல; காதல் லீலையை மறைப்பதற்காக முகத்திரையை தவறாகப்படுத்துவோர்தான் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
சென்னை போன்ற நகரங்களில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிந்தவர்கள் இஸ்லாத்தில் இல்லாத முகம் மறைத்தலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதே சமயம் முகம், முன் கை தவிர மற்ற உறுப்புகளை மறைப்பதற்கு தடை சட்டம் போட்டால் அதைக் கடுமையாக நாம் எதிர்த்தாக வேண்டும். அப்படிச் சட்டம் இயற்ற எந்த ஜனநாயக நாட்டிலும் இடமில்லை.
முகத்தை மறைப்பதைத் தடுக்க தக்க காரணங்களைக் கூறுவதுபோல் இதற்கு எந்தக் காரணத்தையும் கூற முடியாது; தடுக்கவும் முடியாது. முகத்தை மறைப்பது தவிர்த்த புர்காவுக்கு பிரான்ஸ் தடை விதிக்கவுள்ளது என்று கருதுவோர் அதற்கான ஆதாரங்களை எடுத்துக் காட்டினால் களமிறங்கிப் போராடவும் நாம் தயங்க மாட்டோம்.
(குறிப்பு : பிரான்ஸ் அதிபர் இஸ்லாம் மீது காழ்ப்புணர்வு உள்ளவர் என்பதைப் பலமுறை உறுதிப்படுத்தியுள்ளார். அவரது நோக்கத்தை நியாயப்படுத்துவதற்காக இதைக் கூறவில்லை. இஸ்லாம் கூறாத ஒன்று சமூகத்தில் கேடு ஏற்படுத்தும்போது அதைத் தவிர்ப்பது நல்லது என்ற அடிப்படையில்தான் இதைக் கூறுகிறோம்.)
ஆதாரம் :http://www.tntj.net/?p=9732
Friday, 15 January 2010
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
CLICK AND READ
இஸ்லாத்தில் பெண்களை ஹிஜாப் (பர்தா - புர்கா, -துப்பட்டி)அணிய கட்டாயப்படுத்துவது ஏன்?
25. "நச்"பெண்களுக்கு பர்தா 20ம் நூற்றாண்டில் பொருந்தி வருமா?
24. "நச்"முஸ்லிம் பெண்களுக்கு பர்தா / புர்கா / ஹிஜாபு தேவையா?
இஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்க்கை! - சகுந்தலா நரசிம்ஹன்
பர்தா, பெண்ணுரிமை & பொதுக்கழிப்பிடம்
CLICK AND READ
பர்தா, பெண்ணுரிமை & பொதுக்கழிப்பிடம்
இஸ்ஸலாத்தில் புர்காவுக்கு யாரையும் வற்புறுத்த வில்லை அடுத்த ஆடவர்கள் பார்க்கா வண்ணம் தான் அவர்களாக போடும் திறை மறைவு (புர்கா), இந்த காலத்திலும் சரி, எந்த காலத்திலும் சரி புர்கா பொருந்தி வரும் தான்,
Post a Comment