Friday, 15 January 2010

படிக்க வந்த மாணவியிடம் ‘தவறாக நடந்துவிட்டேன்.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
படிக்க வந்த மாணவியிடம் தவறாக நடந்து விட்டேன். என்னை மன்னியுங்கள்” என்று தலைமை ஆசிரியர் அமலன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கொடுங்கையூரை சேர்ந்த பிளஸ் 2 மாணவி, தலைமை ஆசிரியர் அமலனிடம் டியூஷன் சென்றார். அவரை கடத்திச் சென்றதாக அமலன் மீது புகார் வந்தது. 3 நாள் முன்பு திடீரென வீடு திரும்பினார் மாணவி. அமலன் அதன் பிறகு சரண் அடைந்தார்.

போலீசில் அவர் அளித்துள்ள வாக்குமூலம்:

எனக்கு திருமணமாகி 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. 6 மாதம் முன்பு பைக்கில் சென்றபோது, நானும் மனைவியும் சிக்கி கீழே விழுந்தோம். உடனே மனைவியை தூக்காமல் என் செல்போன் எங்கே என்று தேடினேன். இதனால் மனைவி சண்டை போட்டார். வீடு சென்ற பிறகும் என்னுடன் பேசவில்லை.

விபத்தில் ஏற்பட்ட காயத்துக்கு, டியூஷன் மாணவி மருந்து போட்டாள். என்னிடம் பாசமாக நடந்து கொண்டார். நானும் தொட்டுப் பேசினேன். திருமணம் செய்வதாக கூறினேன்; அதை நம்பினாள். இருவரும் வீட்டை விட்டு வெளியேறினோம்.

நாகப்பட்டினம், வேளாங்கண்ணியில் அறை எடுத்து தங்கினோம். போலீசார் தேடுவது தெரிந்ததும் சென்னை திரும்பினோம்.
நம்பிக்கை வைத்து என்னிடம் படிக்க வந்த மாணவியிடம் தவறாக நடந்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்.

இவ்வாறு அமலன் கூறினார். சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முருகானந்தம் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அமலன் அடைக்கப்பட்டார்.

மாணவிக்கு அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடந்தது. அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதிபடுத்தப்பட்டது. அமலனுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என தெரிகிறது.

0 comments: