Tuesday, 5 January 2010

அசைவ உணவு வழங்கியதால் பரபரப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அந்தமானில் இருந்து கப்பலில் சென்னை வந்த ஐயப்ப பக்தர்களுக்கு அசைவ உணவு கொடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அந்தமானில் இருந்து கப்பலில் 360 ஐயப்ப பக்தர்கள் உட்பட 600 பேர், நேற்று காலை 9 மணிக்கு சென்னை துறைமுகம் வந்தனர். கப்பலில் அவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டுள்ளது.குருசாமி திருமாவளவன் கூறுகையில், “கடந்த 31ம் தேதி சிறப்பு கப்பல் மூலம் சென்னை புறப்பட்டோம். கப்பலில் டிக்கெட் எடுக்கும் போதே சைவ உணவு வழங்க வேண்டும் என்று கடிதம் கொடுத்திருந்தோம். ஆனால், உணவில் மீன், கோழிக்கறி, முட்டை போன்ற அசைவ உணவுகள் இருந்தன. கேப்டனிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. இன்னும், ஐயப்ப பக்தர்கள் அந்தமானில் இருந்து சென்னை வர இருக்கின்றனர்.

0 comments: