Monday, 4 January 2010

பரபரப்பு ரவுடி கொலை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தரமணியை அடுத்த கானகம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ஜெயபதி (40). அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்தார். இவர் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளது. இவருக்கும் வேளச்சேரியை சேர்ந்த மற்றொரு ரவுடி ஆனந்தன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. ஜெயபதி 2 ஆண்டுக்கு முன்பு ஆனந்தனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றார். ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.இந்த வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ளார் ஜெயபதி. தரமணியில் உள்ள மருத்துவமனைக்கு நேற்று பிற்பகல் சென்றார். பின்னர் ஸ்ரீராம் காலனியில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்திவிட்டு பெட்டிக் கடை முன்பு பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த ஆனந்தன் மற்றும் அவரது மகன் ரமேஷ் உட்பட 6 பேர் ஜெயபதியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். ரத்த வெள்ளத்தில் ஜெயபதி சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், ஜெயபதியின் உடலை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

0 comments: