இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது தோப்படைபட்டி. இங்குள்ள சி.எஸ்.ஐ., தொடக்கப்பள்ளியில் 132 மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று வழக்கம் போல் பள்ளி நடந்து கொண்டிருந்தது. ஸ்ரீதர் என்ற ஆசிரியர் நான்காம் வகுப்பில் பாடம் எடுத்துக்கொண்டிருந்த போது, திலகா, கிருஷ்ணவேணி என்ற மாணவிகள் திடீரென தலை சுற்றி மயங்கி விழுந்தனர். ஆசிரியர் அதிர்ச்சியடைந்த நேரத்தில், அருகிலிருந்த வகுப்புகளின் மாணவர்களும் தொடர்ந்து மயங்கி விழுந்தனர். இதை தொடர்ந்து, 108 அவசர சேவைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 24 மாணவர்களும், கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கல்வித்துறையினரும், மருத்துவத்துறையினரும் இந்நிலைக்கான காரணத்தை கூற மறுத்துவிட்டனர்.
0 comments:
Post a Comment