இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகில் உள்ள மச்சேஸ்வரர் கோயில் அர்ச்சகர் தேவநாதன். இவர் கோயிலுக்கு வரும் பெண்களை கருவறைக்கு அழைத்து சென்று தகாத முறையில் நடந்து கொண்டதாக விஷ்ணு காஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து பெண்களுடன் அவர் உல்லாசமாக இருப்பது போன்ற சிடிக்கள் காஞ்சிபுரம் மற்றும் தமிழகம் முழுவதும் பரவியது. இந்நிலையில், காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தேவநாதன் சரண் அடைந்தார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில், தேவநாதனுடன் தொடர்புடைய நர்ஸ் தாரா, பூக்கார பெண் கலா, ஏற்றுமதி நிறுவன பெண் ஊழியர் அபிதா, குடும்ப பெண் வள்ளி ஆகியோர் காஞ்சிபுரம் குற்றப் பிரிவு போலீசில் வாக்குமூலம் அளித்தனர்.
தங்களுக்கு வசிய மருந்து கொடுத்து அர்ச்சகர் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர்கள் கூறியிருந்தனர்.
இவர்கள் 4 பேரும் காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். பிற்பகல் 3.20 மணிக்கு அவர்களை போலீசார், நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். நீதிபதி காயத்திரி முன்னிலையில், ஒவ்வொரு பெண்ணாக சென்று, பூட்டிய அறைக்குள் ரகசிய வாக்குமூலம் அளித்தனர். மாலை 6 மணி வரை விசாரணை நடந்தது. அதன்பின் அந்த பெண்களை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
நீதிமன்றம் இருந்த இடத்தில் தாலுகா அலுவலகம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட அலுவலகங்கள் இருப்பதால் கூட்டம் அலைமோதியது. விசாரணையை பார்க்க வக்கீல்கள் தமிழ்ச்செல்வன், தேசய்யாவுடன் தேவநாதனின் மனைவி தேவகங்கா வந்திருந்தார்.
Friday, 22 January 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment