இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
பள்ளி மாணவர் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பஞ்சாப் மாநிலம் ஹோஷியாபூரைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவர் அபி வர்மா. இவரை 2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி விக்ரம் சிங், ஜஸ்விர் சிங் ஆகியோர் கடத்திச் சென்றனர்.
அவர்கள் கேட்ட ரூ.50 லட்சத்தை குடும்பத்தார் கொடுக்க முடியாததால் அபிவர்மாவை கொலை செய்தனர். இவர்களுக்கும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ஜஸ்விர் சிங்கின் மனைவி சோனியாவுக்கும் பஞ்சாப் செஷன்ஸ் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. அதை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மூவரும் மனு தாக்கல் செய்தனர். இதை நீதிபதிகள் எச்.எஸ்.பேடி, ஜே.எம்.பஞ்சால் ஆகியோர் கொண்ட பெஞ்ச் நேற்று விசாரித்தது.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் விக்ரம் சிங், ஜஸ்விர் சிங் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தனர்.
எனினும், ஜஸ்விர் சிங்கின் நெருக்கடிக்கு பணிந்தே சோனியா செயல்பட்டதாகக் கூறி அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கடத்தல் என்பது தவறான வழியில் பொருளைக் குவிக்கும் தொழிலாக நாடு முழுவதும் வளர்ந்து வருவதாக நீதிபதிகள் வேதனையுடன் குறிப்பிட்டனர்.
0 comments:
Post a Comment