Friday, 27 November 2009

இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட வில்லை பா.மா.கா அறிவிப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
திருச்செந்தூர், வந்தவாசி, சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட வில்லை என்பது பயந்து எடுக்கப்பட்ட முடிவு இல்லை. ஒரு பாராளுமன்ற தொகுதியிலோ, சட்டமன்ற தொகுதியிலோ கோர்ட்டு தீர்ப்பு மூலம் பதவி காலியானால் தவிர வேறு காரணங்களால் வெற்றிடம் ஏற்பட்டால் அந்த தொகுதியில் இருந்து பொது தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர் எந்த கட்சியில் இருந்தாரோ அந்த கட்சிக்கே பதவி வழங்க வேண்டும் பா.ம.க. போட்டியிடா விட்டாலும் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ஏற்கனவே அறிவித்துள்ளோம். இடைத்தேர்தலில் பா.ம.க. வாக்காளர்கள், யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்று தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி கொள்வார்கள். அதே வேளை, யாருக்கும் ஓட்டு போட வேண்டாம் என்று அங்கு பிரசாரம் செய்ய மாட்டோம். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

0 comments: