Friday, 27 November 2009

பக்ரீத் பண்டிகை தலைவர்கள் வாழ்த்து

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இறைவனுக்கு இணையாக எதுவுமில்லை என்னும் இறைப்பற்றை உணர்த்தும் நாள் பக்ரீத் திருநாள்! பகிர்ந்துண்ணும் பழக்கத்தை போதிக்கும் நாள் பக்ரீத் நாள்! தியாகத்தின் உன்ன தத்தை உணர்த்தும் நாள் பக்ரீத் திருநாள்! தன்னலத்திற்காக பிறரை பலி கொடுக்கும் இவ்வுலகில், தான் பெற்ற ஒரே மகனையும் தியாகம் செய்யத் துணிந்த இறை தூதர் இப்ராஹீம் அவர்களின் அர்ப்பணிப்பை தியாகத்தை இந்த நாளில் நினைவு கூர்ந்து, அவரது வழியில் அன்பு, சகோதரத் துவம், ஒற்றுமை ஆகிய வற்றை வளர்த்து நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்ல நாம் அனை வரும் பாடுபட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்து, இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள் அனைவரும் ஏற்றத்தையும், இன்பத்தையும் மன அமைதி யையும் பெற்று வளமுடன் வாழ மீண்டும் எனது “பக்ரீத்” நல்வாழ்த்துக்களை உரித் தாக்கிக் கொள்கிறேன்.

0 comments: