இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
ஹஜ் புனித யாத்திரைக்காக மெக்கா வரும் 1 கோடி பேருக்கு இலவச உணவு வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சவூதி வர்த்தகர்களும் நல அமைப்புகளும் கூட்டாக செய்துள்ளன. இலவச உணவு வழங்குவதற்காக 5 நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் உயர்தர ஹோட்டல்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
செüதி அரேபியாவில் உள்ள மெக்கா மற்றும் மதினாவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து புனித யாத்திரை வரும் முஸ்லிம்களுக்கு அந்நாட்டு அரசும் தன்னார்வ அமைப்புகளும் அனைத்து வசதிகளை செய்து கொடுப்பது வழக்கம்.
இந்த ஆண்டு யாத்ரீகர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி 1 கோடி பேருக்கு இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளபோதிலும் செüதியில் ஈகை குணம் குறையவில்லை. குறிப்பாக ஹஜ் புனிதப் பயணம் மற்றும் ரமலானை ஒட்டி ஏராளமான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. யாத்ரீகர்களுக்கு சூடாகவும் குளிர்ந்த நிலையிலும் உணவு பண்டங்களை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று நட்சத்திர ஹோட்டல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இன்டர்காண்டினென்டல் ஹோட்டல் குழும நிர்வாகமும் இலவச உணவு வழங்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக 20 செüதி வர்த்தகர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர இலவச உணவு வழங்குவதற்காக பல்வேறு தொண்டு நிறுவனங்கள் தாற்காலிக உணவு விடுதிகளை ஏற்படுத்தி உள்ளன.
அல் அமெüதி உணவு விடுதி மவுண்ட் ரமாக் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 2 ஆயிரம் பேர் அமர்ந்து உணவு சாப்பிட முடியும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி இடங்கள் உள்ளன. காபி, டீ, தண்ணீர், குளிர் பானங்களும் இலவசமாக வழங்கப்படுகின்றன. பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க இலவச முகமூடிகளும் வழங்கப்பட உள்ளன.
Friday, 27 November 2009
Subscribe to:
Post Comments (Atom)



0 comments:
Post a Comment