Saturday, 28 November 2009

துபாய் பங்கு சந்தையில் வீழ்ச்சி தங்கம் விலை குறைகிறது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
துபாயின் முன்னணி நிதி நிறுவனமான துபாய் வேர்ல்டு, ரூ.2.77 லட்சம் கோடி கடனை கட்ட முடியாமல் திவால் ஆனதாக அறிவித்தது. இதையடுத்து ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி,பொருளாதார நெருக்கடி காரணமாக சென்னையில் நேற்று சவரனுக்கு 270 ரூபாய் குறைந்துள்ளது. விவரம் வறுமாறு... துபாய் நாட்டில் அரசு முத்லீட்டு நிறுவனம் மற்றும் துனை நிறுவனங்கலுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.நிதிசந்தையில் ஏறத்தாழ பல கோடி அளவிலான கடண்களை திருப்பி செலுத்த முடியாதவாறு அளவுக்கு அங்கு அமைந்துள்ளது. புதிதாக தொழில் செய்பவர்கள் வரத்து குறைந்துள்ளதால் அங்கு தொழில் தொடங்க ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர், இதனால் துபாய் பங்கு சந்தை பெரும் வீழ்ச்சி காணப்பட்டது இதனால் இந்தியாவிலும் பங்கு சந்தையில் 240 புள்ளிகள் வீழ்ச்சி கண்டுள்ளது, இதனால் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு 270 ரூபாய் குறைந்துள்ளது. மேலும் துபாயில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் தங்கம் வாங்கி சேமித்து வைத்த சேமிப்பாளர்கள் தங்கத்தை விற்க தொடங்கியுள்ளனர். இதனால் தங்கம் விலை மேலும் குறையும் என எதிர்ப்பார்க்க படுகிறது.உலக மார்கெட்டில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் தங்கம் (31.1 கிரம்) 60 டாலராக குறைத்துள்ளது

0 comments: