Saturday, 28 November 2009

துபாயில் ஏற்பட்ட நிதிச் சுழல் காற்று: இந்திய பங்குச் சந்தையில் பாதிப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
துபாய்: துபாய் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏற்பட்ட நிதி பாதிப்பு நேற்று உலக அளவில் பெரும் பாதிப்பை சந்தையில் ஏற்படுத்தியது. இந்திய பங்குச் சந்தையில் அதன் எதிரொலியாக 600 புள்ளிகள் நேற்று மதியம் சரிந்தன. 'துபாய் வேர்ல்ட்' என்ற அமைப்பு ஐக்கிய அரபு அரசு ஆதரவு பெற்ற, பெரிய நிதிச்சந்தை நிறுவனம். துபாய் ஷேக் முகமது பின் அல் மக்தூம் சொத்தை நிர்வகிக்கும் நிறுவனம். மாபெரும் இந்த நிறுவனத்தின் துணை நிறுவனம், 'நக்ஹீல்' என்பதாகும். பிரமாண்ட அடுக்குமாடிக் கட்டடங்கள், மற்றும் பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் தொடர்புடைய இந்த நிறுவனம் பொருளாதார சிரமத்தில் சிக்கியது. அதை அறிந்த ஷேக் உடனடியாக அந்த நிறுவனத்தை சிக்கனப்படுத்த நிர்வாகத்தை மாற்றினர். அதற்குள் 5900 கோடி டாலர் (2.70 லட்சம் கோடி ரூபாய்) நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் திணறுகிறது என்ற தகவல் கசிந்தது. உரிய அளவு வர்த்தகத்திற்கு பணம் இல்லை.துபாய் அரசிடம் பணத்திற்கு பஞ்சம் இல்லை, சமாளித்து விடலாம் என்று அறிவித்த போதும், உலக அளவில் ரியல் எஸ்டேட் , மற்றும் வங்கிகள் சந்தையை வெகுவாகப் பாதித்தது. அது பாரீசில் எதிரொலித்தது, ஓரளவு ஜப்பான் சந்தை தப்பியது. ஐரோப்பிய சந்தைகள் அடி வாங்கின. அமெரிக்க வங்கிகள் பாதிப்படைந்திருக்கிறதா என்பது தெரியவில்லை. என்றுமே 'துபாய் வேர்ல்டு' அமைப்பில் சூரியன் அஸ்தமிக்காது என்ற கோஷம் இப்போது அர்த்தமற்றதாக மாறிவிட்டது. இந்த நிலையை உணர்ந்து சவுதி வங்கிகள், தங்கள் வங்கிப் பணப் பரிவர்த்தனையை இவர்களுடன் நிறுத்திக் கொண்டன. இந்தோனேஷியாவில் இருந்து இங்கே வந்த 'இஸ்லாமிய நிதி' கதி என்ன ஆகும் என்று தெரியவில்லை. இதன் பாதிப்பால் அபாரமாக ஏறிய தங்கத்தின் விலையும் சற்று சரிந்தது. நன்றி : தினமலர்

0 comments: