Tuesday 15 September 2009

செல்வி ஜெயலலிதாவா? திருமதி சோபன் பாபுவா? கவர் ஸ்டோரி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னை, அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா, செல்வியா? திருமதியா? என்ற சர்ச்சை தமிழக அரசியலில் தீவிரமடைந்து வருகிறது. இது குறித்து குமுதம் இதழில் வெளிவந்த கட்டுரையை முரசொலி இன்று வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு : 1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அதிமுகவை தோற்றுவித்தார். பத்து வருடங்களுக்கு பிறகு 1982ம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்தார் ஜெயலலிதா. அதற்கு முன்பு - அவர் சில வருடகாலம் - ஆந்திர மாநலித்தில் தெலுங்கு சினிமா உலகில் நெம்பர் ஒன் கதாநாயகனாகத் திகழ்ந்த சோபன் பாபுவுடன் குடித்தனம் நடத்தி வந்தார். சோபன் பாபுவுடன் அவருக்கிருந்த உறவு எப்படிப்பட்டது? அப்போது - ‘குமுதம்‘ வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஜெயலலிதாவே, “நானும் அவரும் கணவன் மனைவியாக குடித்தனம் நடத்துகிறோம்“ என்று பதிலளித்தார். அப்படியானால் - “உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டதா?“ என்று ‘குமுதம்‘ நிருபர் கேட்டார். திருமணம் செய்து கொண்டால்தான் கணவன் - மனைவி என்றாகும் என்பதில் எனக்கு நம்பிக்கையி்ல்லை. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனினும் இணைந்து ஒன்றாகவே வாழ்கிறோம். - என்றார் ஜெயலலிதா. ‘குமுதம்‘ நிருபர் அத்தோடு திருப்தியடைந்து விடாமல், இன்னொரு கேள்வி கேட்டார். அது என்ன? “சோபன் பாபுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி - மனைவியும் இரண்டு குழந்தைகளம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?“ இது கேள்வி. ஜெயலலிதா பளிச்சென்று பதிலளித்தார் “அது தெரிந்திருப்பதால்தான் - அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் - நான் அவரோடு இந்த வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறேன்“. கடைசியாக ஒரு கேள்வி - “இப்போது உங்கள் உறவு எப்படி இருக்கிறது?“ ஜெயலலிதா மகிழ்ச்சி பொங்கிடச் சொன்னார் “கோயிங் ஸ்டெடி!“ - குமுதம் இந்தப் பேட்டியை “கோயிங் ஸ்டெடி“ என்று தலைப்பிட்டு - சோபன்பாபு - ஸ்டுடியோவுக்குச் செல்ல காரில் ஏற முற்படும் போது - பால்கனியிலிருந்து ஜெயலலிதா உற்சாகமாகக் கையை ஆட்டி ‘டாட்டா‘ காட்டும் புகைப்படத்தோடு வெளியிட்டிருந்தது. ஜெயலலிதா - சோபன்பாபுவுடன் மனைவி - கணவனாக தனிக்குடித்தனம் நடத்தியபோது - வீணை வாசித்தது - உணவு பரிமாறியது, நூலகத்தில் அளவளாவியது போன்ற இதர புகைப்படங்கள் தெலுங்கு சினிமா இதழ் ஒன்றில் வெளிவந்தவையாகும். தமிழக அரசைப் பற்றி திரும்பத் திரும்ப தாங்கள் “மைனாரிட்டி அரசு“ என்று ஒவ்வொரு அறிக்கையிலும் சொல்லி வந்த காரணத்தால் அவ்வாறு நீங்கள் சொல்லுகிற வரை உங்களை “திருமதி ஜெயலலிதா“ என்று குறிப்பிட போவதாக மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் செய்தியாளர்கள் கூட்டத்தின் போது சொல்லிவிட்டார் என்பதற்காக, கடுமையான அறிக்கை விட்டு, பெண்களை மட்டும் தூண்டி விட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிக்கைவிட்டுள்ள திருமதி. ஜெயலலிதாவிடம் சில கேள்விகள் - உங்கள் கைப்பட முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் - என் இதய தெய்வத்திற்கு உங்கள் அம்மு எழுதிக் கொள்வது என்றும் 13 ஆம் தேதி உங்கள் துணைவியாரோடு சென்று திருமணங்களை நீங்கள் நடத்தி வைத்தது பற்றி தெரிந்தும்கூட, நான் அதைப்பற்றி மனதிற்குள் பெரிதுபடுத்தி வருத்தப்படவில்லை. ஆனால் அன்று இரவு, எத்தனையோ தூண்டுதல்கள், தாக்குதல்கள், மறைமுகமான அவமானங்கள் இன்னும் எத்தனையோ பிரச்சினைகளையெல்லாம் தாங்கிக் கொண்டிருந்து அமைதி காத்து வந்த நேரத்தில் - எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல நீங்கள் துணைவியாருடன் என் எதிரில் காரில் ஏறிச் சென்றதும், பல பேர் பார்த்திருக்க, நான் அங்கே தனியாக நின்ற போது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் தோன்றிற்று“ என்றும் - “என்ன இருந்தாலும் நான் உங்களுக்கே சொந்தமான உங்கள் அம்முதானே? எண்ணில் அடங்கா ஆசை... சந்தித்து, கூட இருந்து, ஒரு வாரம் ஆகிவிட்டது. நாளைக்காவது பார்க்க அனுமதியும் வாய்ப்பும் தர வேண்டுகிறேன். உங்கள் மீது எல்லையில்லா அன்பு கொண்டவள் நான் என்பது உங்களுக்கு இன்னும் புரியவில்லையா? அதில் எள்ளளவும் மாற்றமில்லை - நான் சாகும் வரை மாற்றம் இருக்காது. அந்த அளவிற்கு நான் என்றென்றும் உங்களுக்கே சொந்தமான உங்கள் அம்மு“ என்றும் குறிப்பிட்டதெல்லாம் பொய்யா? நீங்கள் இவ்வாறு எழுதிய வாசகங்கள் எல்லாம் உண்மை என்றால், உங்களை திருமதி என்று அழைத்ததிலே என்ன தவறு இருக்க முடியும்? பின் எதற்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்கள்? இது மாத்திரமல்ல; எம்.ஜி.ஆர். இறந்த பிறகு, இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆசிரியர் பிரித்தீஷ் நந்தி சென்னை வந்து, ஜெயலலிதாவைப் பேட்டி கண்டார். 1.5.1988 இதழில் அந்தப் பேட்டி பிரசுரமாகியிருக்கிறது. நந்தி : எம்.ஜி.ஆருக்கும் உங்களக்கும் இடையிலான உறவு எப்படிப்பட்டது? Tell me what was the exact nature of the relationship you shared with M.G.R. over the years? ஜெயலலிதா பதில் : எனக்கு எல்லாமே அவர் தான். He was everything to me. இந்தத் தகவல்களையெல்லாம் மீண்டும் வெளியிடுவதில் நமக்கு எண்ணமே இல்லைதான். இருந்தாலும கொடை நாட்டில் ஓய்வெடுக்கும் அம்மையார், சும்மா இருக்காமல், அறிக்கை என்ற பெயரால் வார்த்தைகளை கொட்டினால் - திரும்ப உண்மைகளை அவர் ஜீரணிக்கத்தான் வேண்டியிருக்கும். இவ்வாறு முரசொலி குறிப்பேடு எழுதியுள்ளது.

4 comments:

Anonymous said...

annadorai,karunanidhi,MGR and jayalalitha all are orey kuttayil ooriya mattaigal.

Anonymous said...

Mr.Annadorai,Mr.Karunanidhi,Mr.MGR and Ms.Jayalaltha are all orey kuttayil ooriya mattaigal.

said...

Appadi podu....

Anonymous said...

MS Subbulakshmi who was married to another person, was seduced by Sadasiva Iyer and made to run away from the hotel where she stayed with her husband. What about this mattai and its kuttai?