Tuesday 15 September 2009

புஷ் மீது ஷூ வீசிய நிருபர் இன்று விடுதலை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த புஷ் ஓய்வு பெறுவதற்கு முன் ஈராக் சென்றிருந்தார். அப்போது அவர் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் ஒன்றில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். மாநாட்டில் கலந்து கொண்ட டி.வி செனல் நிருபர் முண்டாசர் அல் சேய்தி, தன் கால்களில் அணிந்திருந்த 2 ஷூக்களையும் கழற்றி புஷ் மீது வீசி எறிந்தார். அவருக்கு ஈராக் நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மனுசெய்ததில் இந்த தண்டனை ஓர் ஆண்டாக குறைக்கப்பட்டது. இவரது நன்நடத்தை காரணமாக அந்தத் தண்டனை மேலும் குறைக்கப்பட்டது. இவர் நேற்றே விடுதலை செய்யப்படுவார் என முன்னர் அறிவிக்கப்பட்டது. எனினும் சட்ட நெறிமுறைகள் முழுமை அடையாததால் அவர் நேற்று விடுதலை செய்யப்படவில்லை. இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் விடுதலை செய்யப்படுகிறார். இந்தத் தகவலை அவரது சகோதரர் டர்காம் தெரிவித்தார்

1 comments:

said...

Add-தமிழ் விட்ஜெட் பட்டன், உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடுவதை மிகவும் எளிமையாக்குகிறது.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்