Wednesday, 16 September 2009

இன்டர்நெட் தொலைபேசி தடை இந்தியாவில் வருகிறது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நாட்டின் பாதுகாப்புக்காக நெட் டெலிபோன் சேவையை தடுக்க தொலை தொடர்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உளவுத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. எஸ்.டி.டி மற்றும் ஐ.எஸ்.டி கட்டணம் அதிகமாகும் என்பதால் பலர் இன்டர்நெட்டின் வி.ஓ.ஐ.பி மூலம் மலிவு விலையில் மணிக் கணக்கில் பேசி வருகின்றனர். ஆனால் இந்த உரையாடல்களை வழிமறித்து கேட்கும் வசதி இந்தியாவில் இல்லை. இதை தெரிந்து கொண்டு, தீவிரவாதிகள் நெட் போன் உரையாடல் மூலம், மும்பை தாக்குதலை வெற்றிகரமாக முடித்துள்ளனர். நெட் போன் மூலம் பேசுபவர்களை அடையாளம் காணவும் முடியாது. எனவே நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என தொலை தொடர்பு துறையிடம், உளவுத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதை ஏற்று நெட் போன் வசதியை தொலை தொடர்பு துறை துண்டித்தால், ஏராளமானோர் பாதிப்படைவர். இந்தாண்டின் முதல் மூன்று மாதத்தில் இந்தியாவில் இருந்து நெட் போன் மூலம் 13 கோடி நிமிடங்கள் பேசப்பட்டுள்ளன என டிராய் கூறியுள்ளது

0 comments: