இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்

அப்பாவி படத்தின் பாடல் காட்சி ஒன்றில் 1115 அடி நீளமுள்ள தேசியக்கொடி பயன்படுத்தப்பட்டுள்ளது.
சூரத்திலிருந்து வரவழைக்கப்பட்ட துணியைப் பயன்படுத்தி, இந்த கொடியைத் தயாரிக்க பத்து பேரின் உழைப்பில் இரண்டு நாட்கள் ஆனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து நாட்கள் படமாக்கப்பட்ட இந்த பாடல் காட்சியில் பல கல்லுரியைச் சேர்ந்த ஐந்நூறு மாணவர்கள் பங்கேற்க சென்னை கோவளம் கடற்கரையில் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நாயகன் கெளதம் பாடும் இந்த பாடலை கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார்.
அந்தப் பாடல்:
எடு எடு எடு வாளை எடு இன்று
இடு இடு இடு ஆணை இடு அட
சட சட சட என தறுதலை தலைகளைச் சாய்த்து விடு
எரி எரி மலைஎன எழுந்து விடு அந்த
நரி நரிகளை கொளுத்தி விடு
சொந்த பாரத நதிகளில் பாவிகள் ரத்தம் பாய்ச்சி விடு
ஆஹா நம் தூண்களின் மேலே சக்கரம் உள்ளது ஏனோ?
ஓநாயை கொல்லச்சொல்லித் தானோ
அடடா நம் தேசியக் கொடியில் சக்கரம் உள்ளது ஏனோ?
அநியாயத் தலையைக்கிள்ளத்தானோ?
கண்ணுக்குள் ஆயிரம் கண்ணி வெடிவைத்தேன்
ஆனாலும் எந்தன் பேரோ அப்பாவி
துப்பாக்கி ஏந்தி வந்த கண்ணா பிரான் நானே
தூரத்தில் என்னைப் பார்த்தல் அப்பாவி
பல சட்டம் போட்டோம் பாரத நாடு மாறவில்லை
சட்டங்களை மீறு நீ தர்மத் தாயின் மூத்த பிள்ளை
உள் நாட்டின் நதிகள் இணைக்க உழவர் தம் வறுமை துடைக்க
வெளி நட்டு வங்கியில் தூங்கும் நம் காசே போதாதா
இது போல் ஒரு தேசம் இந்த பூமியில் பூமியில் ஏதுமில்லை
இதுபோல் ஒரு ஊழல் அந்த சாமியும் சாமியும் பார்த்ததில்லை
0 comments:
Post a Comment