இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்

சோகம் பாதி, சொர்க்கம் மீதின்னு இருக்கார் ராதா. ஆந்திர முதல்வர் ஒய்எஸ்ஆரின் மரணம் சோகம் என்றால், மகள் கார்த்திகாவின் முதல் ஹிட் சொர்க்கம்! கிளியை வளர்த்து ஹிட்டுகிட்டே கொடுக்கறதுகுள்ளே தலையால் தண்ணி குடிச்சிடலாம். முதல் படம் ஹிட் என்பது சாதாரண விஷயமல்ல. மகளுடன் அவ்வப்போது சில விழாக்களுக்கு வரும்போதே பெண்ணை என் படத்திலே நடிக்க வைங்கன்னு கேட்கிற டைரக்டர்கள் ஏராளம். அதிலே சரியான டைரக்டரை தேர்வு செய்து நடிக்க வைத்தால்தான் பெண்ணுக்கு எதிர்காலம் என்பதால் பெரிய டைரக்டர்கள் வரும் வரைக்கும் காத்திருந்தாராம் ராதா.
நாகார்ஜுனுடன் பல படங்களில் நடித்தவர் என்ற உரிமையில் அவரை நேரில் சந்தித்த ராதா, தனது பெண்ணுக்காக அவரிடம் சினிமா வாய்ப்பு கேட்டார். உடனே தனது மகன் நாக சைதன்யாவுடன் கார்த்திகாவை ஜோடியாக நடிக்க வைத்துவிட்டார் நாகார்ஜுனா. படத்தின் பெயர் ஜோஷ்.
ஏராளமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வளர்ந்த படத்திற்கு ரிலீஸ் தேதி குறித்தார்கள். அந்தோ பரிதாபம். அதே நாளில்தான் ஆந்திர முதல்வர் ஒய்எஸ்ஆர் மரணம். ஆந்திராவே துக்கத்தில் மூழ்க, ராதாவுக்கு இரட்டை துக்கம். அதில் ஒன்று மகள் நடித்த முதல் படத்திற்கே தடங்கலா? ரிலீசை அடுத்த வாரத்திற்கு தள்ளி போட்டார்கள். நல்லவேளை, ராதாவின் வயிற்றில் ஜில்லென்று ஐஸ்கிரீம் விழுந்தது. ரசிகர்களின் கைதட்டு மழையில் நனைந்தார் கார்த்திகா. படம் செம ஹிட்.
எப்படியோ, யார் செய்த புண்ணியமோ, ஆந்திர சினிமாவில் அடுத்த வாரிசு ரெடி...
2 comments:
your site information good , keep it up
thank
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி , வாழ்த்துக்கள்
beermohamed
Post a Comment