இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்

தமிழ் சினிமாவின் சாயலை மலையாள சினிமா உள்வாங்கி வருவதாக எழுந்துள்ள குற்றசாட்டுக்கு பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி காட்டமாக பதில் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், மலையாள சினிமா தனது தனித்தன்மையை இழந்து வருகிறது என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. கொஞ்சம் கொஞ்சம் பாதிப்பு இருக்கலாம். முழுக்க சீரழிஞ்சிருச்சுன்னு குற்றம் சாட்ட முடியாது. இன்னிக்கும் தேசிய விருதுகள் அறிவித்தால் மூன்றில் ஒரு பங்கு எங்களுக்குத்தான் கிடைக்குது. கதையோட உள்ளடக்கத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதும் நாங்கள்தான். தமிழ் சினிமாவின் சாயலை கொஞ்சம் மலையாள சினிமா உள்வாங்கி இருப்பது உண்மைதான். ஆனால் அதையே குறையாக சொல்ல முடியாதபடிக்குத்தான் மலையாள சினிமா இருக்கிறது, என்று கூறியிருக்கிறார். மம்மூட்டிக்கு பிடித்த சமீபத்திய தமிழ் படம் நாடோடிகள் என்பது கொசுறு தகவல்.
1 comments:
உங்கள் தகவல் அனைத்தும் அருமை , உங்கள் blog ஐ bookbark செய்துள்ளேன்
தீபாவளி வாழ்த்துக்கள்
நன்றி
Post a Comment