Thursday, 17 September 2009

படவாய்ப்புக்காக நீச்சல் உடைக்கு மாறும் சிம்ரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
கதாநாயகிகள் இடையே வாய்ப்பு பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. கவர்ச்சிக்கும், ஆடை குறைப்புக்கும் மறுத்த நடிகைகள் மனம் மாறுகிறார்கள். முன்னணி கதாநாயகிகள் முத்த காட்சி, நீச்சல் உடை என இறங்கி வந்ததே இதற்கு காரணம். தமிழ், தெலுங்கு படங்களில் முதல் இடத்தில் இருக்கும் நயன்தாரா நீச்சல் உடைக்கு மாறி பரபரப்பூட்டினார். பிரியாமணி தெலுங்கு படத்தில் நீச்சல் உடையில் நடித்தார். திரிஷா, ஸ்ரேயா போன்ற பாப்புலர் நடிகைகள் பலர் கவர்ச்சியில் தாராளம் காட்டுகிறார்கள். இதனால் குத்தாட்ட கவர்ச்சி நடிகைகள் பலர் ஓரம் கட்டப்பட்டு விட்டனர். கதாநாயகிகளே ஆடை குறைப்பு செய்து ஆடுவதால் அவர்கள் பிழைப்பின்றி உள்ளனர். நீச்சல் உடை, முத்தக்காட்சிக்கு சம்மதிப்பவர்களுக்கு தான் இனிமேல் கதாநாயகி வாய்ப்பு என்ற நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில் பழைய கதாநாயகி சிம்ரனும் நீச்சல் உடைக்கு மாறுகிறார். தமிழ் படங்களில் மீண்டும் நடிக்க கடந்த சில மாதங்களாக வாய்ப்பு தேடினார். ஆனால் எதிர்பார்த்தபடி படங்கள் வரவில்லை. இதனால் முன்பு போல் கவர்ச்சியாக நடிக்கத் தயார் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் என்று தூது அனுப்பியும் வாய்ப்பு தேடுகிறார். திருமணம் செய்து குடும்பம் நடத்தும் மந்த்ராபெடி சமீபத்தில் நீச்சல் உடையில் வந்து ரசிகர்களை கிறங்க வைத்தார். அதே மாதிரி சிம்ரனும் தயாராகி வருகிறார்

0 comments: