இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்

உலகை அச்சுறுத்தும் பன்றிக்காய்ச்சல் நோய் எச் 1 என் 1 வைரஸ் கிருமிகளால் பரவுகிறது. இந்நோய்க்கு உலகம் முழுவதும் இதுவரை 3,205 பேர் உயிர் இழந்துள்ளனர்.
2 லட்சத்து 77 ஆயிரத்து 607 பேர் இந்நோய் தாக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, இந்த நோயை கட்டுப்படுத்த உலக சுகாதார மையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
பன்றிக்காய்ச்சலை ஏற்படுத்தும் எச் 1 என் 1 வைரஸ் கிருமிகளை கட்டபடுத்தவும், அதை தடுக்கவும் புதிய மருந்தை அமெரிக்கா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது, முதன் முதலாக மூக்கு வழியாக செலுத்தும் மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இது 34 லட்சம் “டோஸ்”கள் கையிருப்பு உள்ளது. இவற்றை மூக்கின் உள் பகுதியில் “ஸ்பிரே” செய்து செலுத்தவேண்டும். இந்த மருந்தை 2 வயது குழந்தைகள் முதல் 49 வயது பெரியவர்கள் வரை பயன்படுத்தலாம்.
இந்த மருந்து அடுத்த மாதம் (அக்டோபர்) அமெரிக்கா முழுவதும் 90 ஆயிரம் ஏஜென்சிகள் மூலம் வினியோகிக்கப்படுகிறது. இதற்காக அமெரிக்க அரசு 19.5 கோடி “டோஸ்” மருந்துகள் வாங்க திட்டமிட்டுள்ளது.
ஏனென்றால், அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் பன்றிக்காய்ச்சல் நோய் பரவியுள்ளது. இதில் 21 மாகாணங்களில் அதிக அளவில் பரவி வருகிறது. எனவே அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது. இந்த தகவலை பன்றிக்காய்ச்சல் தடுப்பு மற்றும் முன் எச்சரிக்கை மையத்தின் தலைமை அதிகாரி ஜெய் பட்லர் தெரிவித்துள்ளார்.
தற்போது, கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலக சுகாதார மையத்தின் மூலம் வினியோ கிக்கப்பட உள்ளது. ஆஸ்திரேலியா, பிரேசில், பிரான்சு, இத்தாலி, நியூசிலாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் அமெரிக்கா வினியோகம் செய்ய உள்ளது.
0 comments:
Post a Comment