Saturday, 19 September 2009

கமலுக்கு மனோரமா எதிர்ப்பு பேட்டி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
கமலஹாசன் திருணமங்களே தேவையில்லை என்ற கருத்தை சமீபத்தில் வெளியிட்டார். வட இந்திய டி.வி. சேனல்கள் இந்த பேட்டியை ஒளிபரப்பு செய்தன. இதற்கு நடிகை மனோரமா பதில் வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:- திருமணங்கள் தேவை இல்லை என்று கமல் காலம் கடந்து சொல்லி இருக்கிறார். என்னை பொறுத்தவரை திருமணங்களை நான் எதிர்க்கவில்லை. எனக்கு திருமணம் நடந்ததால் என்மகன் பூபதி என்ற முத்து கிடைத்தான். அவனுக்கு மூன்று குழந்தைகள் முத்துக்களாய் பிறந்துள்ளன. ஒரு பெண் டாக்டருக்கு படிக்கிறாள். இன்னொரு பெண் கல்லூரியில் படிக்கிறாள். கமல் திருமணம் செய்ததால்தான் ஸ்ருதி என்ற முத்து கிடைத்து இருக்கிறார். எல்லோரும் என்னை ஆச்சி என்று அழைக்கின்றனர். சமீபத்தில் ஒரு விழாவில் வீர மறத்தி மனோரமா வாழ்க என்று கோஷமிட்டனர். அது மகிழ்ச்சியளித்தது. ஆண், பெண் இருபாலரும் திருமணத்துக்கு முன்பே ஆண்மைக்குறைவு, எய்ட்ஸ் போன்றவற்றுக்கான மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதை சட்டமாக்கும்படி அரசிடம் வற்புறுத்துவேன். கள்ளக்காதல், கொலைகள் போன்றவை இந்த பிரச்சினைகளால்தான் நடக்கின்றன. எனக்கு தெரிந்த பல பெண்கள் எய்ட்ஸ் மற்றும் ஆண்மைக்குறைவு கணவர்களால் ஏமாற்றப்பட்டு உள்ளனர். இத்தகைய குறைபாடு உள்ள இளைஞர்களின் பெற்றோர்கள் பண ஆசையால் அப்பாவி இளம் பெண்கள் வாழ்வை சீரழிக்கிறார்கள். அந்த பெண்களை காப்பாற்ற புதிய இயக்கம் துவங்க உள்ளேன். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டவும் இருக்கிறேன். நிறைய பெண்களிடம் இருந்து என் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து கடிதங்கள் வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: