இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
சேலம் அழகாபுரத்தை சேர்ந்தவர் சூரியநாராயணன். இவர் சிகரெட் ஏஜென்சி நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். கடை கடையாக சென்று பணத்தை வாங்கி வருவார்.
இதுபோல் நேற்று மாலை இவர் செவ்வாய்பேட்டை பகுதிக்கு வந்து பணம் வசூலித்து வந்தார்.
பின்னர் அவர் வசூலான ரூ.2லட்சத்து 41ஆயிரத்தை கைப்பையில் ஒன்றில் போட்டு எடுத்து கொண்டு நடந்து வந்தார். அப்போது அவரது பின்னால் வந்த வாலிபர் ஒருவர் பணப்பையை பறித்து கொண்டு ஓடினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன் திருடன் என கத்தினார்.
இதை கேட்ட பொதுமக்கள் திருடனை துரத்தி சென்றனர். இதை பார்த்து விட்ட திருடன், சந்து பொந்துக்களில் புகுந்து ஓடினான். இவனை பொதுமக்கள் துரத்தி சென்று மடக்கி பிடித்து செவ்வாய்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
இது சினிமாவில் வரும் சண்டைக்காட்சி போல இருந்தது.
பின்னர் திருடனை இன்ஸ்பெக்டர் சேகர், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
இவனது பெயர் பிரபாகரன் (வயது 21).சேலம் அருகே உள்ள மின்னாம்பள்ளியை சேர்ந்தவன். ஏன் இவன் திருடினான் என்று போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
Saturday, 19 September 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment