Sunday, 20 September 2009

டில்லியில் வரலட்சுமி சரத்குமாரின் மம்மா மியா நிகழ்ச்சி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சமீபத்தில் சென்னையில் நடத்தியது போன்று மம்மா மியா நிகழ்ச்சியை டில்லியிலும் நடத்த திட்டமிட்டிருக்கிறார். அமெரிக்க கலாசாரத்தை அடிப்படையாக கொண்ட ‘மம்மா மியா’ என்ற நடனத்தை முறைப்படி கற்று தேர்ந்தவர் வரலட்சுமி. சிம்புவுடன் போடா போடி படத்தில் ஜோடி போடுவதாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர், பின்னர் அந்த படத்தில் இருந்து விலகியதும் சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மம்மா மியா நிகழ்ச்சியை நடத்தினார். அந்தரத்தில் பறந்து வரலட்சுமி ஆடிய நடனம் அனைவரையும் கவர்ந்தது. இதே நடன நிகழ்ச்சியை தற்போது தலைநகர் டில்லியிலும் நடத்த திட்டமிட்டுள்ளார் வரலட்சுமி. இதற்கான ஏற்பாடுகள் துரித கதியில் நடந்து வருகிறது. வரலட்சுமியின் தந்தை நடிகர் சரத்குமார் டில்லியில் மம்மா மியா நிகழ்ச்சியை நடத்துவதற்காக வேலைகளில் இறங்கியிருக்கிறார். டில்லியில் உள்ள வி.ஐ.பி.,க்கள் பலரும் வரலட்சுமியின் மம்மா மியா கலை நிகழ்ச்சியை காணவிருக்கிறார்கள். விரைவில் நடன நிகழ்ச்சி நடைபெறும் தேதி அறிவிக்கப்படவிருக்கிறது.

0 comments: