இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்

வீட்டிலேயே அபார்ஷன் செய்து கொண்ட ஆஸ்திரேலிய டீன் ஏஜ் பெண் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த பெண்ணுக்கு மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும், என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளை தான் உட்கொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைத்தால் தான் மருந்து கடைகளில் மருந்து தருவர். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியை சேர்ந்தவர் டேகன் லீச்(19). இவளது காதலன் செர்ஜி ப்ரினான்(21). காதலின் எல்லை மீறியதால் லீச் கர்ப்பமானாள். அபார்ஷன் செய்யும் காலம் கடந்ததால் கர்ப்பத்தை கலைக்க உள்ளூர் மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை.எனவே, காதலன் செர்ஜியின் சகோதரியின் மூலம் ரஷ்ய டாக்டர்கள் பரிந்துரை செய்த மருந்தை உக்ரைன் நாட்டிலிருந்து வரவழைத்து வீட்டிலேயே கருக்கலைப்பு செய்துள்ளனர்.
இந்த விஷயம் வெளியே கசிந்ததால் லீச் மீதும் அவளது காதலன் மீதும் வழக்கு தொடரப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்தது. “தடை செய்யப்பட்ட மருந்தை லீச் உட் கொண்டதற்கான ஆதாரங்கள் இல்லை’ என, லீச் தரப்பில் வாதாடிய வக்கீல் தெரிவித்தார். ஆனால், லீச் வீட்டில் சோதனையிட்ட போலீசார், பயன்படுத்தப்பட்ட கருக்கலைப்பு மாத்திரைகளின் உறைகளை கைப்பற்றி கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
கருக்கலைப்பு செய்ததை லீச், நீதிபதி முன்பு ஒப்பு கொண்டாள். இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட மருந்தை வெளிநாட்டிலிருந்து வரவழைத்து பயன்படுத்திய குற்றத்துக்காக லீச்சுக்கும், செர்ஜிக்கும் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக, ஆஸ்திரேலிய சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment