இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்

சென்னை : சென்னை மெரீனா கடற்கரை பகுதியில் நேற்று நள்ளிரவு இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. சென்னை மெரீனா கடற்கரை பகுதியில் நேற்று இரு பிரிவினருக்கிடையே மோட்டார் பைக் ரேஸ் நடந்தது. இதில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரின் பகுதிகளுக்குள் சென்று கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு மற்றொரு பிரிவினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் ஏற்பட்ட மோதலில் 6 மோட்டார் பைக்குகள் தீக்கிரையாக்கப்பட்டன. 40 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் அங்கு பதட்டம் நிலவியது. இதனை தொடர்ந்து இரு பிரிவினரின் முக்கிய பிரமுகர்கள் கூடி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பதட்டம் சற்று தணிந்துள்ளது. சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர
0 comments:
Post a Comment