இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
வேலூர் : மகள்கள் இரண்டு பேரை பலாத்காரம் செய்த கொடூர தந்தைக்கு, ராணிப்பேட்டை விரைவு நீதி மன்றம், 50 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கியது. வேலூர் மாவட்டம், சோளிங்கர் அடுத்த கூடலூரை சேர்ந்தவர் முடி திருத்தும் தொழிலாளி சம்பத் (37); மனைவி வசந்தா (35). இவர்களது மகள்கள் கோமதி (19) தேன்மொழி (15) பரமேஸ்வரி (10) லோகேஸ்வரி (9); மகன் சரவணன் (4).
கடந்த 2008 அக்., 25ம் தேதி, வசந்தா வெளியில் சென்ற போது, சம்பத் அவரது மகள்கள் கோமதி, தேன்மொழி ஆகியோரை பலாத்காரம் செய்தார். தந்தையின் கொடூர நடவடிக்கை குறித்து, கோமதியும், தேன்மொழியும் தாயிடம் கூறினர். அக்., 31ம் தேதி, அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசில் வசந்தா புகார் செய்தார். மகளிர் போலீசார் விசாரித்து, சம்பத்தை கைது செய்தனர். பின், ஜாமீனில் வெளியில் வந்த சம்பத், தலைமறைவாகி விட்டார். அடுத்த ஆண்டு ஜூலை 22ம் தேதி, போலீசார் மீண்டும் கைது செய்தனர். இந்த வழக்கு, ராணிப்பேட்டை விரைவு நீதிமன்றத்தில் நடந்தது.
நேற்று வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்ற நிதிபதி, சம்பத்துக்கு மூன்று ஆயுள் தண்டனைகள் (42 ஆண்டுகள்) மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததற்கு மூன்றாண்டு, பெண்களை கொடுமை படுத்தியதற்காக மூன்றாண்டு, பயமுறுத்தியதற்கு இரண்டு ஆண்டு என, மொத்தம் 50 ஆண்டு, தனித்தனியாக கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Thursday, 17 September 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment