இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்

ங்கிலாந்து நாட்டு `ஸ்பைஸ்கேர்ள்’ பாடல் ஆடல் குழுவை சேர்ந்த அழகி கெரி ஹல்லிவெல். இவர் ஐ.நா. சபையின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான வன்முறைக்கு எதிராக பிரசாரம் செய்வதற்காக இவர் சமீபத்தில் நேபாளம் சென்றார். அப்போது அவர் அந்த நாட்டின் பிரதமர் 56 வயது மாதவ் குமார் நேபாளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். இரவு விடுதி பாடகியான அவர் சேலை கட்டிக்கொண்டு, கை இல்லாத ரவிக்கை அணிந்து பிரதமருடன் கன்னத்தோடு கன்னத்தை உரசியபடி காட்சி அளித்தார். அவர் முத்தம் கொடுத்ததும், கன்னத்துடன் கன்னம் உரசியபடி காட்சி அளித்ததும் அந்த நாட்டு டி.வி.சேனல்களில் ஒளிபரப்பானது. அதை பார்த்த மக்கள் பிரதமர் இப்படி கண்ணியக்குறைவாக நடந்து கொள்ளலாமா என்று கேள்வி எழுப்பினார்கள். இது அங்கு சர்ச்சையை எழுப்பி உள்ளது. பிரதமருக்கு எதிரான விமர்சனத்தையும் கிளப்பி உள்ளது. அந்த நாட்டு பத்திரிகைகள் பிரதமரை கண்டித்து உள்ளன.
0 comments:
Post a Comment