இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்

அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஒசாமா பின்லேடன் அமெரிக்க மக்களுக்கு புதிய மிரட்டல் விடுத்துள்ளான். இந்த மிரட்டலை பின்லேடனின் பத்திரிகை தொடர்பு அமைப்பான அஸ்-சாகப் வெளியிட்டுள்ளது. அட்ரஸ் டூ த அமெரிக்கன் பப்ளிக் என்ற தலைப்பில் அந்த இணையத்தள செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பின்லேடனின் படம் ஒன்று வீடியோ திரையில் தெரிய ஆடியோவில் பின்லேடன் பேசி உள்ளது ஒலி பரப்பாகிறது. முழுமையாக வீடியோ காட்சிகள் எதுவும் அதில் இல்லை.
இந்த ஆடியோ டேப்பில், அமெரிக்க நாட்டு மக்களுக்கு பின்லேடன் எச்சரிக்கை விடுத்துள்ளான். 10 நிமிடம் அதில் பின்லேடன் பேசுகிறான். உப தலைப்பு எதுவும் அதில் இடம் பெற வில்லை.
அமெரிக்க நாட்டு மக்கள் இஸ்ரேல் நாட்டுடன் தொடர்பு வைத்து இருக்கிறீர்கள். இந்த தொடர்பை துண்டித்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் உங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று அந்த கேசட்டில் பின்லேடன் கூறி உள்ளான்.
பொதுவாக பின்லேடன் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் இத்தகைய எச்சரிக்கை விடுவதை வழக்கத்தில் வைத்துள்ளான். வழக்கம் போல இந்த ஆண்டும் அவன் எச்சரிக்கை டேப் அனுப்பி உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்
0 comments:
Post a Comment