Monday, 14 September 2009

மக்கள் வரிப்பணத்தை வீனடிக்கும் அரசியல் வாதிகள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்திய அரசு தற்போது நாட்டில் வறட்சி நிலவுவதால் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்போகிறதாம் என்ன வேடிக்கை பாருங்கள், இவ்வளவு வருடமாக அமைச்சர்களின் பயன செலவு 182 கோடியாம், அமைச்சர்களின் ஒரு நாள் ஒட்டல் ரூம் வாடகை ஒரு லட்சமாம், ஒரு அமைச்சர் வெளி நாடு செல்ல தனி விமானமாம், கூட அவர்களின் சொந்த பந்தம் அனைவரும், நாட்டில் விலைவாசி என்ன நிலைமை இருக்கிறது, என்பதை யாருமே திரும்பி கூட பார்பதில்லை, அரிசி விலை என்ன? பருப்பு வலை என்ன ? பெண்களின் எட்டாத கனியாக தங்கம் இப்போது இருக்கும் நிலைமை என்ன ? நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு, வறட்சி, பன்றிக்காய்ச்சல், என நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் இருக்க, இத்தனை வருடமாக மக்கள் வரிப்பனத்தை வீனடித்து விட்டு இப்போது தான் நாட்டில் வறட்சி நிலவுகிறதாம், என்ன வேடிக்கை, இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள், சொந்த நாட்டில் கைதிகளாக வலம் வருகிறார்கள், பெண்கள் கற்பழிக்கபடுகிறார்கள், இதை எல்லம் வேடிக்கை பார்க்கும் அமைச்சர்கள் தமது செலவினங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிண்றனர், தினமலரில் வந்த செய்தி வரிகள் அரசு சிக்கன முடிவில் சேரத் தயங்கிய பவார் அடக்கி வாசிப்பு, மத்திய அமைச்சர்கள் கமல்நாத், சரத் பவார் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களின் ப்பனத்தில் சொகுசாக வாழ நினைக்கும் இவர்களா இந்தியாவை காப்பற்ற போகிறார்கள், வளம் மிக்க இந்தியவை உருவாக்குவோம் கலாமின் கனவுகள் எங்கே, இப்பொழுது இருக்கும் அரசியல்வாதிகளிண் கனவுகள் எங்கே , மக்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்று பார்ப்போமே உங்கள் ஒட்டு 1 , மக்கள் வரிப்பனத்தை வீனடிப்பவர்கள் அமைச்சர்களா, அரசியல்வாதிகளா, இல்லை அதிகாரிகளா, இதற்க்கு தீர்வு தான் என்ன ?

0 comments: