Sunday, 13 September 2009

தசரா, தீபாவளி பண்டிகை: வெடிகுண்டு தாக்குதலுக்கு தீவிரவாதிகள் சதி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மும்பையில் நடந்த தாக்குதல்களை போல இந்தியாவில் பல இடங்களில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக இந்திய உளவுத்துறைக்கு ஏற்கனவே தகவல்கள் கிடைத்தன. டெல்லி, கொல்கத்தா, மும்பை, புனா, ஆமதாபாத், ஐதராபாத், பெங்களூர் ஆகிய நகரங்களை அவர்கள் குறிவைத்து இருப்பதாக தகவல்கள் கிடைத்தன எனவே இந்த நகரங்கள் ஏற்கனவே உஷார் படுத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. டெல்லியில் சமீபத்தில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஒருவன் பிடிபட்டான். அவனிடம் விசாரணை நடத்தியபோது இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கு தீவிரவாதிகள் குழு ஒன்றை ஏற்கனவே அனுப்பி வைத்து இருப்பதாகவும் மேலும் பலர் இந்தியாவுக்குள் ஊடுருவ தயாராக இருப்பதாகவும் கூறினான். எனவே தீவிரவாதிகள் எங்காவது பதுங்கி இருக்கிறார்களா என நாடு முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. எல்லை வழியாக ஊடுருவதை தடுக்க அங்கும் பாதுகாப்பு படைகள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் கடல் வழியாக வந்தனர். எனவே கடல் வழியாக அவர்கள் வந்து விடாமல் தடுக்க கடற்படை, கடலோர காவல்படை ரோந்து சுற்றி வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்காவும் ஒரு தகவலை வெளியிட்டு உள்ளது. அதில் இந்தியாவில் பண்டிகை காலத்தை ஒட்டி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு துறை வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் ரம்ஜான், தசரா, தீபாவளி பண்டிகைகள் நடக்க இருக்கின்றன. இந்த காலத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர். அவர்கள் அமெரிக்கர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. எனவே அமெரிக்கர்கள் இந்தியாவில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே பயணம் செய்வதாக இருந்தால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மும்பையில் நடந்த தாக்குதலின் போது அமெரிக்கர்களும் கொல்லப்பட்டனர். இதே போன்று அமெரிக்கர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் ஓட்டல், சுற்றுலா தலங்கள் ஆகியவை தீவிரவாதிகளின் முக்கிய குறியாகும். எனவே அந்த இடங்களில் எச்சரிக்கையுடன் இருங்கள். மிக பாதுகாப்பு உள்ள இடங்களுக்கு மட்டுமே பயணம் செய்ய வேண்டும். அதிக இடங்களுக்கு செல்வதை குறைத்து கொள்ளுங்கள். மக்கள் அதிகம் கூடும் இடம் வழிபாட்டு தலங்கள் பொழுது போக்கு இடங்கள் ஆடம்பர ஓட்டல் கள் போன்றவற்றுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் கடல் வழியாக வந்தனர். எனவே கடல் வழியாக அவர்கள் வந்து விடாமல் தடுக்க கடற்படை, கடலோர காவல்படை ரோந்து சுற்றி வருகிறது. கடந்த தடவை தீவிரவாதிகள் குஜராத் வழியாக வந்து மராட்டியத்துக்குள் ஊடுருவினார்கள். இப்போது கர்நாடகா அல்லது கோவா வழியாக ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக கருதி அங்கும் கண்காணிக்கப்படுகிறது. ரம்ஜான், தசரா, தீபாவளி பண்டிகைகள் அடுத்தடுத்து நடக்க இருக்கின்றன. இதற்கு முன்பு ரம்ஜான் பண்டிகை நேரத்தில் ஐதராபாத்திலும் தீபாவளி நேரத்தில் டெல்லியிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். எனவே இப்போதும் இந்த பண்டிகைகளை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல் நடத்த லாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்காவும் ஒரு தகவலை வெளியிட்டு உள்ளது. அதில் இந்தியாவில் பண்டிகை காலத்தை ஒட்டி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

0 comments: