Sunday, 13 September 2009

தியாகராயநகரில் 1000 ரூபாய் கள்ள நோட்டுகள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல நகை மற்றும் ஜவுளி கடைகளுக்கு கடந்த சில தினங்களாக கள்ள நோட்டுகள் புழக்கத்திற்கு வருவதாக போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனுக்கு புகார்கள் வந்தது. அவரது உத்தரவின் பேரில் இணை கமிஷனர் சக்திவேலு, துணை கமிஷனர் சம்பத்குமார் ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் கண்ணபிரான், இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் அதிரடி கண்காணிப்பில் இறங்கினர். அங்குள்ள பிளாட்பார ஜவுளி கடை ஒன்றில் துணி வாங்கிவிட்டு வட மாநில வாலிபர்கள் இருவர் 1000 ரூபாய் நோட்டை கொடுத் துள்ளனர். அப்போது அது கள்ளநோட்டு என சந்தேகப்பட்டு அவர்களுடன் வியாபாரி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இது குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் வட மாநில வாலிபர்களை சுற்றி வளைத்தனர். அவர்கள் கொடுத்த 1000 ரூபாய் நோட்டை சோதித்தனர். அது கள்ள நோட்டு என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து மேலும் 16 கள்ள நோட்டுகளை கைப்பற்றினர். அவர்கள் 2 பேரும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராஜுசேக், அலுகாய் சேக் என்பது தெரிய வந்துது. அவர்களது கூட்டாளிகள் பெரியமேட்டில் உள்ள லாட்ஜில் தங்கியிருப்பது கண்டு பிடிக்ககப்பட்டது. அங்கு அதிரடி சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்த முகமதுஜாகீர், பார் அழகிகள் லோத்கா (25), ருக்ஷானா (38) ஆகிய 3 பேரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து 76 கள்ள ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். கள்ள நோட்டின் மூலம் வாங்கி குவித்திருந்த ஜவுளிகள், நகைகள், வாசனை திரவியங்களை கைப்பற்றினர். ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணமும் சிக்கியது. 5 பேரையும் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மண்ணூர்சேக் என்பவரிடம் இருந்து கள்ள நோட்டுகளை வாங்கி வந்ததாக தெரிவித்தனர். கள்ள நோட்டுகள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் பொருளா தாரத்தை சீர்குலைக்க அனுப்பப்பட்டவையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மண்ணூர் சேக்கை பிடிக்க தனிப்படை போலீசார் ஜார்க்கண்ட் செல்கிறது. சென்னையின் முக்கிய வர்த்தக நகராக விளங்கும் தியாகராயநகரில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments: