இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
கேரள மாநில போக்கு வரத்து துறை மந்திரியாக இருப்பவர் ஜோஸ். இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், இருமல் விட்டு விட்டு வந்தது. இதனால் அவர் வீட்டிலிருந்தபடியே டாக்டரிடம் சிகிச்சைபெற்று வந்தார்.
இந்தநிலையில் காய்ச்சல் கடுமையானதால் சட்டசபைக்கு செல்ல முடியாமல் ஜோஸ் அவதிபட்டார். இதனையடுத்து அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சிகிச்சை அளித்தடாக்டர்கள் அவருடைய சளி, மற்றும் ரத்தம் ஆகியவற்றை பரிசோதனை செய்தனர். அப்போது அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதனால் மந்திரி ஜோசை தனி சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கேரளாவில் போக்கு வரத்து துறை மந்திரி ஜோஸ் பன்றிக்காய்ச்சலால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sunday, 13 September 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment