இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
தங்கம் விலை கடந்த சில தினங்களாக ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.11 ஆயிரத்து 704 ஆக இருந்தது.
நேற்று தங்கம் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.1455-க்கும், ஒரு பவுன் தங்கம் 11 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
ஒரு பவுனுக்கு 64 ரூபாய் குறைந்தது. இதனால் மக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. இன்று (வெள்ளி) காலை நிலவரப்படி தங்கம் விலையில் திடீர் ஏற்றம் காணப்பட்டது. கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்தது. இதனால் ஒரு கிராம் தங்கம் விலை இன்று காலை ரூ.1467 ஆக இருந்தது.
ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.11 ஆயிரத்து 736 ஆக விற்கப்பட்டது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விரைவில் ஒரு பவுன் தங்கம் 12 ஆயிரம் ரூபாயை எட்டி பிடித்து விடும் என்று கூறப்படுகிறது.
சுபமுகூர்த்த தினங்கள் அதிகமாக வர உள்ள நிலையில் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்வது மக்களிடம் சோர்வை ஏற்படுத்தியுள்ளது.