Saturday, 12 September 2009

மக்கள் செல்வாக்குள்ள தலைவர் யாரும் இல்லை - லட்சுமிபார்வதி புகழாரம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் 2-வது மனைவி லட்சுமி சிவபார்வதி. இவர் ஐதராபாத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி வீட்டுக்கு சென்று அவரது மனைவி விஜயலட்சுமிக்கு கண்ணீருடன் ஆறுதல் கூறினார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்தியாவில் இதுவரை எத்தனையோ தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ராஜ சேகரரெட்டி அளவுக்கு மக்கள் செல்வாக்கு இருந்ததில்லை. காரணம் மாதத்தில் பாதி நாட்கள் அவர் ஏழை- எளிய மக்கள் வசிக்கும் கிராம பகுதிகளுக்கு சென்று அவர்களது கஷ்ட- நஷ்டங்களை கேட்டு அதை தீர்க்க நடவடிக்கை எடுத்தார். அவர் கொண்டு வந்த ராஜீவ் ஆரோக்கியஸ்ரீ திட்டம் மிகவும் உயர்வானது. இத்திட்டம் மூலம் ராஜசேகர ரெட்டி ஏழை- எளிய, நடுத்தர மக்கள் இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை, கருப்பை அகற்றும் சிகிச்சை போன்ற லட்சக்கணக்கில் செலவாகும் அறுவை சிகிச்சைகளை தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக செய்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தார். இதன் மூலம் லட்சணக்கான உயிர்களை காத்துள்ளார். அவர் டாக்டர் என்பதால் மனித உயிரின் மதிப்பு மிகவும் நன்றாகத் தெரியும். அவரது புரட்சிகர திட்டங்களை நான் சில ஆண்டுகளுக்கு முன்பே பாராட்டி இருக்கிறேன். அவரது மறைவு ஆந்திராவுக்கு மிகப்பெரிய இழப்பாகும். இவ்வாறு அவர் கூறினார்.